யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் காதலித்து கல்யாணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி கூட பிரபல ஹிந்தி நடிகையான அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அந்த வரிசையில் அடுத்து இந்திய ஒரு நாள் மற்றும் டி 20 அணியின் வீரர்களில் ஒருவரான கர்நாடகாவைச் சேர்ந்த மனிஷ் பான்டே, நடிகையான அஷ்ரிதா ஷெட்டியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் நேற்று டிசம்பர் 2ம் தேதி மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கு முதல் நாளான டிசம்பர் 1ம் தேதியன்று தனது மாநில அணியான கர்நாடகாவின் கேப்டனாக இருந்து தமிழ்நாட்டிற்கு எதிராக டி20 சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று கொடுத்தார் மனிஷ் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அஷ்ரிதா ஷெட்டி 2013ல் சித்தார்த் நடித்து வெளிவந்த 'உதயம் என்எச் 4' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நஅறிமுகமானார். அடுத்து 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், இந்திரஜித்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மனிஷ் பாண்டே, அஷ்ரிதா ஷெட்டிக்கு கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.