யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
சமூக வலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன்பு பார்வையற்ற இளைஞரான திருமூர்த்தி என்பவர் பாடிய, 'விஸ்வாசம்' படப் பாடலான 'கண்ணான கண்ணே' மிகவும் வைரலாகப் பரவியது. அவர் பாடியதைக் கேட்டு பலரும் அதை ஷேர் செய்தனர். அது அப்பாடலுக்கு இசையமைத்த இமானையும் எட்டியது. உடனே, திருமூர்த்தியை தனது இசையில் பாட வைப்பேன் என்று அறிவித்தார்.
சொன்னது போலவே திருமூர்த்தியை ஜீவா நடிக்கும் 'சீறு' படப் பாடலில் தன் இசையில் பாட வைத்து பாடகராக அறிமுகப்படுத்திவிட்டார். அந்தப் பாடலை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். 'செவ்வந்தியே...' என்ற அந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவே உள்ளது.
இருப்பினும் அனுதாபத்தால் இந்தப் பாடலை 'ஷேர்' செய்யாமல், உண்மையிலேயே பிடிச்சிருந்தால், இந்த குரல் பிடிச்சிருந்தால் ஷேர் பண்ணுங்க. இந்தப் பாடல் வெற்றி மூலம்தான் அவர் பலப் பல பாடல்கள் பாடணும். மற்ற இசையமைப்பாளர்களும் இவரைப் பாட வைக்கணும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.