Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டு மேடையில் பேச பயமாக இருக்கிறது: மம்முட்டி

03 டிச, 2019 - 10:43 IST
எழுத்தின் அளவு:
I-am-fear-to-speak-in-Tamilnadu-stage-says-Mammootty

மம்முட்டி, உன்னி முகுந்தன், இனியா, கனிகா, அனுசித்தாரா, பிராச்சி தெஹ்லான் நடித்துள்ள மலையாளப் படம் ‛மாமாங்கம்'. இது கும்பகோணம் மகாமகம் போன்று கேரளாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாமாங்கம் விழாவின் சரித்திர பின்னணியை கொண்ட படம். பத்மகுமார் இயக்கி உள்ளார். வேணு குணப்பில்லி தயாரித்துள்ளார். 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

இந்தப் படம் தமிழிலும் வெளிவருகிறது. தமிழ் வசனங்களை இயக்குனர் ராம் எழுதியுள்ளார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு மம்முட்டி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மேடையில் பேசுவதற்கே பயமாக இருக்கிறது. படங்களில் எப்படியோ டப்பிங் பேசி விடுகிறேன். மேடையில் பேசும்போது உளறிவிடுகிறேன். சரித்திர படங்களில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியானது. காரணம் நம் சரித்திரத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் பணி அது.

100 வருடங்களுக்கு முன்பு கேரளா, தமிழ்நாடு என்ற எந்த பிரிவும் கிடையாது. எல்லாமே சமஸ்தானங்கள், மன்னர்களின் ஆட்சிதான். ஆங்கிலேயர்களுக்கு பிறகு நம் வசதிக்காக மொழிவாரியாக பிரிந்து கொண்டோம்.

இன்றைக்கு பேசும் மலையாளத்தை விட சரித்திரகால மலையாளத்தில் தமிழ் வார்த்தைகள் அதிகம். அதனால் இந்தப் படத்திற்கு அதிகமான வசனங்களை மாற்றத் தேவையில்லாமல் இருந்தது. என்றாலும் கஷ்டப்பட்டுதான் தமிழில் பேசினேன். ராம் அதற்கு உதவி செய்தார்.

ஒரு கொலை சம்பவம் நடக்கிறது. கொலை செய்தவனும் இல்லை, கொலையானவனும் இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக அந்த குடும்பங்களின் சந்ததிகள் தொடர்ந்து பகை பாராட்டி கொலை செய்கிறார்கள். யாருக்காக கொலை செய்கிறோம். எதற்காக செய்கிறோம் என்பது தெரியாமலயே இது நடக்கிறது. இந்த நெடும் பகை வேண்டாம் என்பதுதான் இந்த படத்தில் சொல்லப்படுவது. இன்றைய காலகட்டத்துக்கு பொருந்துகிற கருத்தை படம் பேசுகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஞ்ஞானபூர்வ பேய் படம்!விஞ்ஞானபூர்வ பேய் படம்! பெண்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு : பாக்யராஜிற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பாராட்டு பெண்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

வால்டர் - Chennai,இந்தியா
04 டிச, 2019 - 17:22 Report Abuse
வால்டர் பெரும் பெயர் பெற்ற தமிழ் நடிகர்கள் அங்கே ஏன் கோலோச்ச முடிவதில்லை. வேற்று மொழி நடிகர்களை அங்கே பதிவு செய்ய கூட அனுமதிப்பதில்லை. ரசிகர்கள் ஏற்க ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் மலையாள சினிமா உலகம் அனுமதிப்பதில்லை. கமலஹாசன், ரஜினி கூட அங்கே படங்கள் பண்ணுவதற்கு வாய்ப்பில்லையே.
Rate this:
vijay - Manama,பஹ்ரைன்
04 டிச, 2019 - 12:36 Report Abuse
vijay ஜார்ஜ் சார் மாமூட்டி அவர்கள் என்ன பொருளில் சொல்லி உள்ளார் என்று புரிந்து கொண்டு பேசுங்கள். படங்களில் என்ன கஷ்டமான டயலாக் இருந்தாலும் டப்பிங்கில் அட்ஜஸ்ட் செய்யலாம் . அனால் மேடையில் தவறாக பேசினால் அடுத்த நொடியே மீம்ஸ் அண்ட் ட்ரோல் பறக்கும்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03 டிச, 2019 - 11:39 Report Abuse
A.George Alphonse தமிழ் சினிமாவில் நடிக்க இவருக்கு பயமில்லை ஆனால் தமிழ் நாட்டு மேடையில் பேசமட்டும் பயமா.என்னா நடிப்பு.
Rate this:
samkey - tanjore,இந்தியா
03 டிச, 2019 - 21:21Report Abuse
samkeyஎங்கே தாம் தமிழை பிழையாக பேசிவிடுவோமோ என்ற பயத்தில் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மலையாள நடிகர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது. நடிப்பை ஒரு தொழிலாகத்தான் பார்க்கிறார்கள்.அதனால் நடிப்பிலும் சரி தனி மனித வாழ்விலும் சரி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தானுண்டு தன வேலையுண்டு என இருக்கிறார்கள். ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் முதல்வர் கனவில் மிதப்பதில்லை. புரட்சி தலைவர் விரும்பி அரசியலுக்குள் வரவில்லை. அவரை இழுத்து விட்டவர் அண்ணாதுரை. வளர்த்து விட்டவர் கட்டுமரம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in