5 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தாண்டு வெளியாகும் ‛ஆடுஜீவிதம்' | பிரபல பின்னணி பாடகரின் தந்தை வீட்டில் 72 லட்சம் திருட்டு | மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? |
பெங்களூரில் வசிக்கும் கேரளத்து பொண்ணு இஷாரா நாயர். 5 ஆண்டுக்கு முன்பு வெண்மேகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பப்பாளி என்ற படத்தில் நடித்தார். என்றாலும் சதுரங்கவேட்டை தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு இவன் யாரென்று தெரிகிறதா என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள பப்பரப்பம் என்ற படம் வெளிவரவில்லை.
தற்போது திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்ட இஷாரா, கடைசியாக நடித்த படம் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா. இதில் ‛கல்லூரி' அகில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரஹிம் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், வர்ஷன், ஜெய்தன் இசை அமைத்துள்ளனர். கெவின் இயக்கி உள்ளார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன் என்று கூறியுள்ள இஷாராவுக்கு அந்த வாய்ப்பை இந்த படம் பெற்றுத் தருமா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.