Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்தது ஏன்?: சுந்தர் சி விளக்கம்

01 டிச, 2019 - 12:07 IST
எழுத்தின் அளவு:
sundar-c-explained-that-why-should-he-acted-in-lip-lock-scene

காமெடி நடிகர் விடிவி.கணேஷ் தயாரிப்பில் வி.இசட்.துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, புதுமுகம், ஷாக்ஷி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 6ந் தேதி வெளிவருகிறது.


இந்த படத்தில் சுந்தர்.சி சாக்ஷி சவுத்ரியுடன் லிப்-லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது


நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். வி. இசட். துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன். அவர் படங்கள் பார்த்து அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை.


இயக்குநராக முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும்.


டீஸரில் வெளிவந்த லிப் லாக் முத்தக் காட்சி பற்றி எல்லோரும் கேட்கிறார்கள் கதைக்கு மிகவும் அவசியம் என்பதால் அந்த காட்சி இடம்பெற்றுள்ளது. என் படத்தில் நிறைய முத்தக்காட்சிகள் வைத்துள்ளேன் நான் நடித்திருப்பது இதுதான் முதல் முறை. மிகவும் தயக்கமாகத்தான் இருந்தது, தவிர்த்து விடலாமே என்று இயக்குனரிடம் சொன்னேன் அவர் அதை ஏற்கவில்லை. ஏகப்பட்ட டேக்குகளுக்கு பிறகுதான் அந்தக் காட்சி இயக்குனருக்கு திருப்தியை தந்தது. இன்னும் நெருக்கமாக நடிக்கத்தான் அவர் விரும்பினார் ஆனால் நான் மறுத்து விட்டேன். என்றார்.


Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் ஸ்டைலில் அடர்ந்த காட்டுக்குள் ஆக்ஷன் செய்யும் ஆண்ட்ரியாஹாலிவுட் ஸ்டைலில் அடர்ந்த ... இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களை சந்திக்கிறார் அனுஷ்கா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

03 டிச, 2019 - 17:55 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு பின்ன அலுத்து போயிருக்குமில்லா
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
03 டிச, 2019 - 11:29 Report Abuse
Sathya Dhara நாடு உருப்படும்...லிப்லாக் என்று ஒரு செய்தி...அதற்கு ஒரு விமர்சனம்.. இந்த கலாச்சார துரோகிகளை...படம் எடுப்பவர்களை...இயக்குபவர்களை.....முதலில் தூக்கில் போடா வேண்டும்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03 டிச, 2019 - 11:18 Report Abuse
Natarajan Ramanathan முத்தக்காட்சி கற்பழிப்பு காட்சி என்றால் மட்டும் இருபது முப்பது டேக் வரை "சரியாக நடிக்காமல்" இருவரும் ஒத்துழைப்பார்கள்.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
02 டிச, 2019 - 17:09 Report Abuse
oce மேலே முத்தலாக் அந்த லாக் எப்பொ.
Rate this:
oce - tokyo,ஜப்பான்
02 டிச, 2019 - 17:07 Report Abuse
oce முதலில் லிப் லாக் அப்புறம் மொத்த லாக்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in