என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கிய அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்து தேசிய விருது பெற்றார். அதன் பிறகு மன்னார் படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போது அவர் வாழ்க விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
வாழ்க விவசாயி மிகவும் நல்ல படம் . விவசாயிகளின் வாழ்வியலை அழகாக மனதை தொடும்படி சொல்லும் கதை. இனி யார் விவசாயம் பற்றியும் விவசாயிகளைப் பற்றி படம் எடுத்தாலும் இந்தப் படத்தின் பாதிப்பு, இல்லாமல் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது .இப்படிச் சொல்லும் அளவுக்கு முழுமையாக விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ச்சிகரமாக பேசுகிற படமாக இது இருக்கும் . இதில் நடித்திருப்பதில் பெருமைப்படுகிறேன் .எனக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும் .விவசாயம் பற்றிய விழிப்புணர்வு படமாகவும் இது இருக்கும் .
நான் கதாநாயகன் அல்ல .கதை நாயகன் மட்டுமே .கதாநாயகன் என்கிற போது ஒரு வட்டத்துக்குள் சுழல வேண்டியிருக்கும் .அதனால் எனக்கென்று பாத்திரங்களில் எந்த இலக்கும் வரையறையும் கிடையாது .அப்படிப்பட்ட நடிகராக ,ஒரு இயக்குநரின் நடிகராக நான் பயணம் செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
அடுத்து நான் நடித்த குஸ்கா படம் வருகிறது அது என்னுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்படி இருக்கும். ,வல்லவனுக்கு வல்லவன், பூம் பூம் காளை, வைரி, ரூட்டு.மாயநதி , இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு, பரமகுரு , கல்தா போன்ற படங்கள் கைவசம் உள்ளன எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.அதனால் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்கிறார்.