அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
90எம்எல் படத்தில் ஓவியாவுடன் இணைந்து தண்ணி அடித்தவர் மாசூம் சங்கர். அதே படத்தில் கவர்ச்சியாலும் கலங்கடித்தார். தற்போது ஆர்யா நடிக்கும் டெடி படத்தில் நடிக்கிறார், ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடித்து வரும் இப்படத்தில் தடையறத் தாக்க, மீகாமன் தடம் ஆகிய படங்களின் இயக்குநர் மகிழ்திருமேனி பவர்ஃபுல் வேடமேற்றிருக்கிறார். மேலும் சாக்ஷி அகர்வால் கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
படத்தில் நடிப்பது குறித்து மாசூம் சங்கர் கூறியதாவது: இப்படத்தில் நடிப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஆர்யா மிகச்சிறந்த நடிகர் என்பதோடு மிகச்சிறந்த நட்போடும் பழகக்கூடியவர். அவருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் படமென்றால் அப்படத்தில் பெரிய மேஜிக் இருக்கும். அவரது படங்கள் எல்லாமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள்.
அப்படியான இயக்குநர் படத்தில் நடிக்கும் போது நாம் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். 90எம்எல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தனுஷ் ராசி நேயர்களே படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளேன். இனி நான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பும் விரைவில் வரும். என்றார்