தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் |
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின். அவர், தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கை ஹர்ஷ்பெர்க் என்பவரை காதலிக்கிறார்.
இந்நிலையில், தான் கர்ப்பமாகி இருக்கும் விஷயத்தை அவர் சமூக வலைதளம் மூலம் வெளியே சொல்லி இருக்கிறார். திருமணம் ஆகாமலேயே, அவர், தான் கர்ப்பமாகி இருப்பதை வெளியே சொல்ல, அதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி விமர்சனம் கிளம்பியது, அது குறித்து கல்கி விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணம் ஆகாமலேயே கர்ப்பம். இதை எப்படி வெளியே தெரியப்படுத்துவது என்பது குறித்து, வெகு நாட்கள் பதற்றமாகவே இருந்தது. இதை வெளிப்படையாக தெரிவித்தால், எப்படியும் எதிர்ப்பு வரும் என்பது எனக்குத் தெரியும். அதுவும் நடிகை என்றாலே, பலரும் இது குறித்து தங்களுடைய ஆவேசத்தை வெளிப்படுத்துவர் என்றும் எதிர்பார்த்தேன். அது தான் நடக்கிறது. நடிகை என்றால், இப்படிப்பட்ட சங்கடங்களையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். பத்து ஆண்டுகளாக, இப்படிப்பட்ட விமர்சனங்கள் என்னை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், எனக்கு ஆதரவாகவும் பலர் உள்ளனர். அக்கம் பக்கத்தவர் எனக்கு ஆறுதலாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கல்கிக்கு, அடுத்த மாதம் பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அவர் கோவாவில் வாட்டர் பர்திங் முறையில் குழந்தை பெறத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.