175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‛ஜடா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கதிர் பேசியதாவது:
பசங்க எல்லாரும் சேர்ந்து படம் பண்ண எப்படி இருக்குமோ அது தான் ஜடா. இது ஒரு வழக்கமான படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ் இருக்கு. நிறைய எமோஷன் இருக்கும். அது தான் எனக்கு மிகவும் பிடித்தது. விளையாட்டு படம் என்று இதனை சுருக்க விட முடியாது.
இன்டெர்நேஷனல் புட்பாலுக்கும், ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும். பிகில் படமும் புட்பால், இந்தப்படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற, இந்தப்படம் வேற. பிகில் முறையான புட்பால் விளையாட்டு பற்றியது. இது உயிரை பணயம் வைத்து ஆடும் சூது விளையாட்டு பற்றியது.
இதில் ரூல்ஸ் எதுவும் கிடையாது. மரணமா? பணமா? என்பதுதான் இந்த விளையாட்டின் வேதம். படம் பார்க்கும்போது புட்பாலை இப்படியும் விளையாடுகிறார்களா என்பது தெரியும். புட்பால் விளையாட்டின் இன்னொரு முகத்தை காட்டுகிற படமாக இருக்கும். என்றார்.