Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதித்ய வர்மா.... த்ருவ் சொல்வாரா? - இயக்குனர் தாமிராவின் ஆதங்க பதிவு

28 நவ, 2019 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Director-Thamira-about-Adithaya-Varma-and-Dhruv-Vikram

நடிகர் விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமான 'ஆதித்ய வர்மா' படம் கடந்த வாரம் வெளியானது. விமர்சன ரீதியாக ஓரளவிற்கு படம் வரவேற்பு பெற்ற நிலையில் வசூல் ரீதியாக படம் மிகவும் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது. படத்தில் இடம் பெற்ற முத்தக் காட்சிகள், சில ஆபாசக் காட்சிகள் படத்திற்கு பெண்களை வரவழைப்பதை தடுத்துவிட்டதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் த்ருவ் விக்ரம் நடிப்பை ஒட்டு மொத்த விமர்சகர்களும் பாராட்டியிருந்தார்கள். தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகம் கிடைத்திருக்கிறார் என்ற பாராட்டு த்ருவ் விக்ரமுக்குக் கிடைத்தது. இருப்பினும் 'ஆதித்ய வர்மா' படத்தில் நடிப்பதற்கு முன்பு பாலா இயக்கத்தில் 'வர்மா' படத்தில் நடித்து முடித்ததே அவரது சிறப்பான நடிப்புக்குக் காரணம் என சிலர் சொல்லியிருந்தனர்.

ஏன், இன்னும் சிலர் பாலா இயக்கிய 'வர்மா' படம் எப்படியிருந்திருக்கும் என்று பார்க்க ஆவலாக இருந்ததாகவும் கூறினர். தெலுங்கு 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கை முதன் முதலில் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் உருவாக்கினார்கள். ஆனால், படம் பிடிக்கவில்லை என தயாரிப்பாளர் மற்றும் விக்ரம் ஆகியோர் கூறியதால் அந்தப் படத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுத்து முடித்தார்கள்.

இந்நிலையில் 'ரெட்டைச் சுழி, ஆண் தேவதை' படங்களை இயக்கிய தாமிரா இது குறித்து முகப்புத்தகத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில்,

“ஆதித்திய வர்மா திரைப்படத்தில் த்ருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போல இல்லை. விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து விட்டார்.. தமிழ் திரைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார். இது தான் ஆதித்திய வர்மா திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரது கருத்தும்.

வெகு சிலர் ஆம் இது இவருக்கு இரண்டாவது படம் தானே! என கிண்டலாக, குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள்.. த்ருவ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும் புதைந்து கிடப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.. அது குறித்து யாரும் பேசவில்லை என்கிற ஆதங்கமே இந்த பதிவின் காரணி...

ஒரு நடிகனாக ”என் காதல் கண்மணி” திரைப்படத்தில் அறிமுகமாகி.... இயக்குநர் ஸ்ரீதரால் ”தந்து விட்டேன் என்னை” திரைப்படத்தில் காதல் நாயகனாக அறியப்பட்ட விக்ரம், பத்தாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு.. சேதுவில் தான் அடையாளம் பெற்றார்.

‛சேது' ஒரு நல்ல திரைப்படம் என்பதைத் தாண்டி இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பவர்கள் நடிப்பில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள் என்று பாலாவின் அடுத்தடுத்த படங்கள் நிரூபித்தன. சேதுவில் எப்படி ஒரு நல்ல நடிகராக அடையாளப்படுத்தப்பட்டு ஒரு முன்னணி நடிகராக விக்ரம் மாறினாரோ..... அதுபோல நந்தாவில் சூர்யாவின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. நந்தா கதாபாத்திரத்தின் உடல் மொழியிலிருந்து சூர்யா விடுபடவே ஐந்து படங்களானது... அதன் பின் வந்த பிதாமகனில் விக்ரமிற்கு நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது...

நான் கடவுள் திரைப்படத்தில் ஒரு நல்ல நடிகனாக உருவானார் ஆர்யா... அவன் இவனில் விசாலின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அதர்வா, ஜி.வி.பிரகாஷ் என நடிக்கும் நடிகர்கள் எல்லோரையும் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தவறியதில்லை...! இயக்குநர் பாலாவின் படங்கள்.

படம் வெற்றியோ தோல்வியோ... தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்திருக்கின்றன..!!
விக்ரம் துவங்கி ஜிவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும்.

இன்று த்ருவ் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப்பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம். த்ருவின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர். பாலாவின் உழைப்பு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்...! என்றேனும் ஒரு நாள் ஒரு நேர்காணலில் த்ருவ் இந்த உண்மையை தன்னியல்பாக சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறேன்” என தாமிரா பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஐய்யப்ப சுவாமி பாடலின் காப்பியா ‛சும்மா கிழி : கிழிக்கப்படும் ‛தர்பார்' பாடல்...ஐய்யப்ப சுவாமி பாடலின் காப்பியா ... ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி: போலீசில் புகார் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

elakkumanan - Naifaru,மாலத்தீவு
29 நவ, 2019 - 07:37 Report Abuse
elakkumanan அரசாங்கத்தை வரி காட்டாமல் ஏமாத்தணும்... அதுக்காக, கடன் வாங்குன மாதிரி அல்லது கடன் வாங்குறான். எங்களுக்கு கொஞ்சம் வடிகால் தேவை. அவ்வளவே. அது நல்ல வடிகாலாக இருந்தால் நல்லது. டாஸ்மாக் கூட ஒரு வடிகால்தான். லாபம் வந்தால், நீங்கள் எல்லாம் பெரிய ஹீரோ போட்டு படம் எடுக்க போற கூட்டம். அப்போ, இந்த லாபம் கொடுத்த சின்ன இயக்குனரோ, சின்ன நடிகரோ தெரியாது. சும்மா கதை விட வேண்டாம் அன்பரே...
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
29 நவ, 2019 - 05:54 Report Abuse
elakkumanan இங்கே ஒரு அன்பர் கூறியது போல, தயாரிப்பாளர் முக்கியம் தான். ஆனால், திரைப்படம் வெறும் பொழுது போக்கு அல்ல. பொழுதும் போக்க இந்தியா, வளர்ந்த நாடும் அல்ல. மேலும், தரமான வகையில் பொழுது போக்க ரசனை வேண்டும். ரசனை மேம்பட வேண்டும்... நல்ல விஷயங்களை ரசிக வேண்டும். அன்பே சிவம் படம் புசு...பீகிள் இருநூறு கோடி வசூல்...இருப்பது ரூவாய்க்கு கூட பெறாது... இதுல தயாரிப்பாளர் லாபம் பாக்குறது....ரசிகனை ஏமாத்துறது .............ப்ளீஸ்............பாலா ஒரு மிக பெரிய , ஆத்மார்த்தமான , அபூர்வமான கலைஜன்.....உங்களால் புரிந்து கொள்ள முடியாதது , அவரின் தவறல்ல...நமது தரம் அவ்வளவே.. இன்றும் அன்பே சிவம் ........பல பேரால் பல இடங்களில் பாராட்டப்படுகிறது........வசூல் இல்லை.........அது போல, பாலாவும்..........நமக்கு புரியவில்லை. உப்பு யாவரியிடம் சிக்கிய வைரம் பாலா.. அவரை தராசில் வைத்து நிறுத்து பார்க்கிறோம்...பீகிள் பாருங்க பாஸூ. தயாரிப்பாளரை காப்பாத்துங்க..சினிமா சாவட்டும்... மொக்கையா... பொழுது போக்குங்க...வாழ்த்துக்கள்....பாலா சார்............நட்பிற்கு நீங்கள் அளிக்கும் மரியாதை...................தலை வணங்குகிறேன்...நீங்கள் இன்னும் உயர்ந்துவிட்டிர்கள் மனதில்..............கடவுள், உங்களோடு துணை இருப்பார்... நாங்கள் ரெண்டு பாட்டு , ரெண்டு பைட் , மொக்க ஜோக் , மற்றும் பிட்டு பார்த்து தயாரிப்பாளரை வாழவைக்கிறோம்...எங்களை மன்னியுங்கள்....
Rate this:
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
28 நவ, 2019 - 18:04 Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Nadigargalai adayaalam kaati Enna prayojanam ? Producergalai nadutheruvula Ila vittutaaru (ethana producers). Innum solla pona sasikumar maapila saavukku kooda oru kaaranam Ivar thaan. Eppaiyume panam potta modhalaali kooda nalla irukkanumnu ninaiga appo thaan oru 40 perukkaachum vela. Illana film industry survive aaguradhu kastam. Producer illana yaarumey illa. Unmaiyaave china hero vechi pudhu director vechi risk edukuraan paaru avan thaanya dheivam (adhuvum unga mogaraikalukku avan kadan vaanguraan paaru)
Rate this:
சுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா
28 நவ, 2019 - 18:00 Report Abuse
சுனாமி பொம்பளைங்களும் வயதுக்கு வராதவர்க்களும் போக முடியாத அளவுவுக்கு இப்படி ஒரு கேவலமான முதல் படம் உனக்கு தேவையா? {மன்னித்துக்கொள் } உன்னை சொல்லி குத்தம் இல்லை உன் தந்தைதான் இதற்க்கு காரணம். நடிப்பு வெறி புடுச்ச எல்லா பயலும் ஒரு படமாவது பாலா படத்துல நடிக்கணும்னு வரிசைல நிக்கிறான்...என்னால் இப்பவும் சவால் விட்டு சொல்ல முடியும் பாலா எடுத்த வர்மா படத்தை இப்ப ரிலீஸ் பண்ண சொல்லு உங்க அப்பாவையும் அந்த தயாரிப்பாளரையும்..... அதுக்கப்பறம் உன்னோட லெவலே தனி.இது ௨௦௦% உண்மை .டப்பிங் படமே எடுக்காத ஒரு நேஷனல் அவார்ட் டயரக்டர் உங்க அப்பாவுக்காக இதை செய்தார் அது தான் உண்மை . நீ வர்மா பட ப்ரோமோஷன்ல அவரை பல தடவ மனசார மாமான்னு கூப்புட்ட நல்லா ஞாபகம் இருக்கு அவரு இன்னுமும் உன்னைய குழந்தையாத்தான் பார்ப்பாருன்னு நெனைக்கிறேன் தயவு செய்து போய் மன்னிப்பு கேளு ,உன் வாழ்க்கை இன்னும் பிரகாசமா இருக்கும் .வாழ்த்துக்கள் தம்பி.
Rate this:
மறத்தமிழன் - Madurai,இந்தியா
28 நவ, 2019 - 15:07 Report Abuse
மறத்தமிழன் பாலா என்ற உன்னத படைப்பாளியை தமிழ் திரையுலகம் மதிக்காத தவறிவிட்டது . பாலா இல்லையேல் விக்ரம் கிடையாது.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in