பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
அர்ஜூன் ரெட்டி, கீதாகோவிந்தம் படங்களுக்குப்பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாகி விட்டார் விஜய் தேவரகொண்டா. தமிழில் நோட்டா என்ற படத்தில் அறிமுகமானதால், அவர் நடிக்கும் தெலுங்கு படங்களும் தமிழ்நாட்டில் வெளியாகின்றன.
கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் விஜய் தேவரகொண்டா, தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக ஏற்கனவே ஐதராபாத்திலுள்ள ஸ்ரீநகர் காலணியில் மூன்று படுக்கையறை வசதி கொண்ட அடுக்குமாடி வீடு ஒன்று வாங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது ஐதராபாத் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிலிம் நகரில் ரூ.15 கோடியில் ஒரு வீடு வாங்கியுள்ளார். கடந்த வாரத்தில் அந்த வீட்டிற்கு கிரகபிரவேஷம் நடத்தி குடும்பத்தினருடன் அந்த வீட்டில் குடியேறியுள்ள விஜய் தேவரகொண்டா, அந்த நிகழ்ச்சிக்கு தருண் பாஸ்கர், நாக் அஸ்வின் போன்ற இயக்குனர்களை மட்டுமே அழைத்திருந்தார்.