Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குட்டி ராதிகாவின் இரண்டாவது ரவுண்டை ‛தமயந்தி' துவக்கி வைப்பாரா?

26 நவ, 2019 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Did-Damayanthi-film-will-start-another-round-to-actress-Kutty-Radhika

‛இயற்கை, மீசை மாதவன்' உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. பின்னர் கன்னட பட உலகில் முன்னணி நடிகை ஆனார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டிலானர். தற்போது பெரிய இடைவெளிக்கு பிறகு தமிழ், கன்னடத்தில் தயாராராகும் ‛தமயந்தி' என்ற படத்தின் மூலம் இரண்டாவது ரவுண்டை தொடங்கியிருக்கிறார்.

இதில் குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, ரஜினியின் நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும் கவனித்துள்ளனர். முன்னணி இயக்குனர்கள் பலரிடம் பணியாற்றிய நவரசன் இயக்கி உள்ளர்.

படம் பற்றி அவர் கூறியதாவது: 1980ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறார்கள். 2019ஆம் ஆண்டு அரண்மனையிலிருந்து எதிர்பாராத விதமாக கதாநாயகியின் ஆவி வெளியே வருகிறது. தன்னையும், குடும்பத்தையும் அழித்தவர்களை தேடி வருகிறது. அதன்பிறகு நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் விறுவிறுப்பு. நிறைய பொருட் செலவு செய்து படமாக்கி இருக்கிறோம்.

ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் லென்ஸ் பொருத்தி நடிக்க வேண்டும் என்று குட்டி ராதிகாவிடம் கூறினேன். அவரும் சரி என்று நடித்தார். 3 நிமிடம் 16 வினாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே டேக்கில் நடித்தார். அதைப் பார்த்து குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள். ஆனால் லைட் வெளிச்சத்தின் உஷ்ணத்தில் அவருடைய கண்களில் இருந்த லென்ஸ்சுகள் உருகி விட்டது. உடனடியாக டாக்டரை வரவழைத்து அவரது கண்களுக்கு சிகிச்சை அளித்தோம்.

டாக்டர் ஓய்வெடுக்க சொல்லியும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்று வலியையும் பொருட்படுத்தாமல் உடனே நடிக்க வந்து விட்டார். இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். பிரம்மாண்டமான அரண்மனை செட்கள் போட்டு படமாக்கி இருக்கோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எப்.ஐ.ஆர் படப்பிடிப்பு தொடங்கியதுஎப்.ஐ.ஆர் படப்பிடிப்பு தொடங்கியது சீனாவில் வெளியாகும் தனுஷ் படம் சீனாவில் வெளியாகும் தனுஷ் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in