Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்.ஐ.ஆர் படப்பிடிப்பு தொடங்கியது

26 நவ, 2019 - 14:55 IST
எழுத்தின் அளவு:
FIR-Shooting-begins

ராட்சசன் படத்திற்கு பிறகு எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‛ஜகஜால கில்லாடி' படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டாலும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

எப்.ஐ.ஆர் என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. சுஜாதா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு பைனான்ஸ் கிடைக்காததால் எப்போது படப்பிடிப்பு என்பதில் குழப்பம் நீடித்தது. இறுதியில் இந்தப் படத்தை, விஷ்ணு விஷால் தயாரிக்க முன்வந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் (நவம்பர் 24) படப்பிடிப்பு தொடங்கியது. 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார், அஷ்வந்த் இசை அமைக்கிறார்.

இது ஒரு இஸ்லாமிய இளைஞனை பற்றிய கதை. எப்.ஐ.ஆர் என்றால் முதல் தகவல் அறிக்கை என்று பொருள் அல்ல, பைசல் இப்ராஹிம் ரைஸ் என்று பொருள். இது விஷ்ணு விஷால் நடிக்கும் கேரக்டரின் பெயர்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறேன். இந்த 6 மாத காலத்தில் நிறைய கதை படித்தேன். நிறைய கதை விவாதத்தில் பங்கேற்றேன். உடற்பயிற்சி செய்தேன். கோடை விடுமுறைக்கு பிறகு குழுந்தைகள் பள்ளிக்கு செல்வது மாதிரி புதிதாக படப்பிடிப்புக்கு வந்திருக்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபுவுடன் திருமணமா? சபீதா ராய் விளக்கம்யோகிபாபுவுடன் திருமணமா? சபீதா ராய் ... குட்டி ராதிகாவின் இரண்டாவது ரவுண்டை ‛தமயந்தி' துவக்கி வைப்பாரா? குட்டி ராதிகாவின் இரண்டாவது ரவுண்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in