Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபுவுடன் திருமணமா? சபீதா ராய் விளக்கம்

26 நவ, 2019 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Wedding-rumours-with-Yogibabu:-Actress-reply

கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகிபாபுவுக்கு திருமணம் முடிவாகி விட்டதாக தகவல் பரவியது. யோகிபாபு முகநூல் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பதுபோல் புகைப்படம் வெளியானது. அதில் 'அவளும் நானும்' என்ற வாசகம் இருந்தது. அந்த புகைப்படங்கள் வைரலானது.

அதை பார்த்த ரசிகர்கள் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர் தான் என்று பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்கள். அது யோகிபாபு பெயரில் இயங்கும் போலி கணக்கு என்று பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் திருமணம் பற்றிய தகவலை யோகிபாபு மறுத்தார். தனது டுவிட்டர் பக்கத்தில், “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன்" என்று கூறினார்.

இந்த நிலையில் யோகிபாவுடன் அந்த படத்தில் இருப்பவர் சபீதா ராய் என்ற நடிகை என்பது தெரிய வந்துள்ளது. அவர் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பவர். இதுகுறித்து சபீதா ராய் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், நான் சபீதா ராய் பேசுறேன். என்ன சொல்றதுன்னே தெரியல... இரண்டு நாளா என்னோட பேரும், காமெடி நடிகர் யோகிபாபு பேரும் டிரண்டிங்கா ஆகியிருந்தது. யோகி பாபு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு எல்லோரும் சொன்னது வேறு யாரும் கிடையாது என்னத்தான்.

எனக்கு சிரிக்கிறதா, அழுவுறதா, கோபப்படுறதா எப்படி ரீயாக்ட் பண்ணனும்னு தெரியல. யோகிபாபு இது வதந்தின்னு மறுப்பு தெரிவிச்சிட்டாரு. நீங்க எதுவுமோ சொல்லலையேன்னு எல்லோரும் என்னை கேட்டுகிட்டிருந்தாங்க. அதுக்குத்தான் இந்த வீடியோ.

2017ம் ஆண்டு கன்னிராசி என்ற படத்தில் முதன் முதலாக அவரோடு நடித்தேன். யோகிபாவுவை ஒரு நடிகனா, காமெடியான எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அதனால் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன். அந்த படம் எப்படி லீக்காகி கல்யாணம் வரைக்கும் வந்தது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. தொடர்ந்து அவருடன் 3 படங்களில் நடித்தேன். லிசா படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தேன். காக்டெய்ல், ராஜவம்சம், படங்களில் நடித்தேன். தயவு செய்து இதுமாதிரி வதந்தி பரப்பாதீர்கள். யோகிபாபு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்காரு. அவர் பெயரை கெடுக்காதீர்கள்.

இவ்வாறு சபீதா ராய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரும், நம்பியாரும்பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரும், நம்பியாரும் எப்.ஐ.ஆர் படப்பிடிப்பு தொடங்கியது எப்.ஐ.ஆர் படப்பிடிப்பு தொடங்கியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Believe in one and only God - chennai,இந்தியா
27 நவ, 2019 - 00:43 Report Abuse
Believe in one and only God யோகி பாபு முடியை பார்த்தாலே பெண்கள் ஓடி விடுவார்கள்.
Rate this:
swega -  ( Posted via: Dinamalar Android App )
26 நவ, 2019 - 21:35 Report Abuse
swega I dont understand why does the industry have scarcity for comedy actors. Really it is awful watching the so called comedy of yogibabu, suri etc
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in