பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பல இயக்குநர்கள் போட்டி போட்டு படமாக எடுத்து வருகின்றனர். அவற்றில் மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது விஜய் இயக்கும் ‛தலைவி' படமும், பிரியதர்ஷினி இயக்கும் ‛தி அயர்ன் லேடி' படமும் தான்.
தலைவியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவர் இந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. மிகவும் ஒல்லியான உடல்வாகு கொண்ட அவர் எப்படி இந்த கதாபாத்திரத்திற்குப் பொருந்துவார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் டீசரிலும் கங்கனாவின் மேக்கப் ஜெயலலிதா போல் இல்லை எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அனைத்து தகுதியும் தனக்கு உள்ளதாக தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை போன்றே தாமும் சிறு வயதில் பெங்களூருவில் படித்தவர், மனதில் உள்ள கருத்தை நேரடியாக சொல்லிவிடுவது, பழக்க வழக்கங்கள் என பல விசயங்களில் ஜெயலலிதாவிற்கும் தனக்கிற்கும் ஒற்றுமை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.