175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ஹிந்தித் திரையுலகின் வசூல் நடிகரான ஷாரூக்கான் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவருடைய அடுத்த படத் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றிய அறிவிப்பை ஷாரூக்கான் தற்போது வெளியிட்டுள்ளார்.
'பாப் பிஸ்வாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தியா அன்னபூர்ணா கோஷ் இயக்குகிறார். 'கஹானி, பாட்லா' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜாய் கோஷ்-ன் மகள் தான் தியா.
“உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் தேவை,” என இது குறித்து சுஜாய் கோஷ் டுவீட் செய்துள்ளார். சுஜாய் கோஷ் இயக்கத்தில் அமிதாப்பச்சன் நடித்து இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த 'பாட்லா' படத்திற்குப் பிறகு ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாப் பிஸ்வாஸ்'.