Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தியில் பேச சொன்னவருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

25 நவ, 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Taapsee-strong-reply-to-person-who-wants-speak-in-Hindi

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கோவாவில் இப்போது நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்வில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்தார் டாப்சி.

அந்த சமயத்தில் பார்வையாளர்களில் ஒருவர், “ஹிந்திப் படங்களில் தானே நடிக்கிறீர்கள், ஹிந்தியில் பேசுங்கள்,” என்றார். சற்றே கோபமடைந்த டாப்சி, இங்கு எத்தனை பேருக்கு ஹிந்தி புரியும்,” என்றார். பலரும் புரியாது என்றார்கள்.

“நான் தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறேன். தென்னிந்திய நடிகையும் கூட. நான் தமிழில் பேசட்டுமா,” என்று கேட்டார். அதற்கு வந்திருந்த பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

கலந்துரையாடலில் பலரும் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டதால் டாப்சி, “ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள பார்வையாளர்களிடமிருந்து இன்னும் சிறப்பான கேள்விகளை எதிர்பார்க்கிறேன்,” என்று கூறினார்.

மேலும் பேசிய டாப்சி, “தென்னிந்தியத் திரையுலகம் தான் சினிமா என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுத் தந்தது. அதுதான் என்னை நடிகையாக்கியது. சில பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமே தென்னிந்தியாவில் வெற்றி பெறுகின்றனர். எனக்கு தென்னிந்திய மொழிகளை விட்டு விலக விருப்பமில்லை, அங்கும் தொடர்ந்து நடிப்பேன்,” என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு கிடைத்த வாய்ப்பு அப்பாவுக்கு கிடைத்திருந்தால் வேற லெவல்: த்ருவ் பெருமிதம்எனக்கு கிடைத்த வாய்ப்பு அப்பாவுக்கு ... 'சரிலேரு நீக்கெவரு' - ரீமேக் உரிமை வாங்கப் போவது யாரு ? 'சரிலேரு நீக்கெவரு' - ரீமேக் உரிமை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

elakkumanan - Naifaru,மாலத்தீவு
26 நவ, 2019 - 09:36 Report Abuse
elakkumanan யாத்தா, எங்க ஊரில் நின்னா ஒட்டு போடுவானுவோ...நிக்கிராயாதா? தனு யாரு என்ன பேசினாலும் எங்காளு ஒட்டு போடுவான்...யோசிச்சு செய்யி.
Rate this:
முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
25 நவ, 2019 - 18:50 Report Abuse
முகமூடி சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிற பெண்.ரமேஷ் அரவிந் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்கள் இவரிடம் படம் கற்க வேண்டும். பாலசந்தர் படத்துல நடிச்சு தமிழ் படத்தால் வளர்ந்த ரமேஷ், கர்நாடகள போய் உக்காந்து காவிரி தண்ணி தரமாட்டோம்னு சொன்னது இழிபிறவி குணம் .வாழ்த்துக்கள் டாப்ஸி உங்களுக்கு, ஒரு தமிழனாக நன்றியை தெரிவிக்கிறேன்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
25 நவ, 2019 - 15:26 Report Abuse
Girija சரியான பிட்டு, அப்படி போடு அருவாளை,
Rate this:
Tamilan - kailasa,இந்தியா
25 நவ, 2019 - 15:23 Report Abuse
Tamilan நல்ல பதில்
Rate this:
Sangeedamo - Karaikal,இந்தியா
25 நவ, 2019 - 14:43 Report Abuse
Sangeedamo சரியா மூக்குடைப்பு, நிருபரிகளின் தரம் தாழ்ந்த கேள்விகளுக்கு இப்படி தான் பாடம் கற்று கொடுக்க வேண்டும்... பாராட்டுக்கள் டப்ப்சி
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in