Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதா தோற்றம்: யார் பொருத்தம்? சரியான போட்டி...

25 நவ, 2019 - 11:24 IST
எழுத்தின் அளவு:
who-is-fine-in-Jayalalitha-look

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாக தற்போது இருவர் படமாக்கி வருகிறார்கள். பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை நித்யா மேனன், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் தி அயர்ன் லேடி என்ற படமும், விஜய் இயக்கத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கும் தலைவி என்ற படமும் உருவாகி வருகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடிக்கும் வெப் சீரிஸ் குயின், கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் தயாராக முடிந்துள்ளது. இந்த வெப்சீரிசின் முதல் பார்வையை செப்டம்பர் மாதம் வெளியிட்டார்கள். ஆனால், முகத்தைக் காட்டாமல் முதுகுப் பக்கத்தைக் காட்டும் முதல் பார்வைதான் வெளியானது.

இந்நிலையில் தலைவி படத்திற்காக இரு தினங்களுக்கு முன்பு முதல் பார்வை வெளியானது. அதற்கு ஒரு டீசரையும் வெளியிட்டார்கள். கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவரைப் பார்க்க ஜெயலலிதா போல இல்லை, ஒரு பொம்மை போலவே உள்ளது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தன. கங்கனாவின் உருவ அமைப்பு, ஜெயலலிதான் உருவ அமைப்பிற்கு பொருத்தமில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

அதே சமயம் கடந்த ஆண்டு ஜெயலலிதா நினைவு நாளில் நித்யா மேனன் நடிக்கும் தி அயர்ன் லேடி படத்தின் முதல் பார்வை வெளியான போது எந்தவிதமான விமர்சனங்களும் எழவில்லை. மாறாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் மிகப் பொருத்தமாக இருக்கிறார் என்றே பலரும் சொன்னார்கள்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாக எடுக்கப்படும் இரண்டு படங்களில் அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றங்கள் வெளியாகி ஒப்பீட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு குயின் வெப்சீரிசில் ரம்யா கிருஷ்ணனின் ஜெயலலிதா கதாபாத்திரத்தின் முகத் தோற்றத்தையும் சீக்கிரமே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் அது அவர்களின் பெருமையை சிறிதும் குலைக்காத வகையில் இருக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்திய அரசியல் உலகில் ஒரு தனிப் பெயர் உண்டு. அதைப் படமாக எடுக்கிறோம் என இந்தப் படைப்பாளிகள் அவரின் பெருமையைக் குலைத்துவிடக் கூடாது என்பதே அவரது அபிமானிகளின் விருப்பமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
அதிர வைக்கும் உண்மை சம்பவம்அதிர வைக்கும் உண்மை சம்பவம் ஒரே மாதத்தில் ஓடிடி வழியில் 'கைதி', என்ன காரணம் ? ஒரே மாதத்தில் ஓடிடி வழியில் 'கைதி', ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Endrum Indian - Kolkata,இந்தியா
26 நவ, 2019 - 17:27 Report Abuse
Endrum Indian சனியன்களின் திருவிழா என்றால் இந்த சினிமா தான்
Rate this:
amicos - Bali,இந்தோனேசியா
26 நவ, 2019 - 15:43 Report Abuse
amicos sasikala is a right person
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
26 நவ, 2019 - 14:16 Report Abuse
Anvardeen தீபா பெஸ்ட் சாய்ஸ்
Rate this:
karutthu - nainital,இந்தியா
26 நவ, 2019 - 13:57 Report Abuse
karutthu இவர் வாழ்க்கையை ஏன் படமாக எடுக்கவேண்டும் ?
Rate this:
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
26 நவ, 2019 - 11:31 Report Abuse
swaminathan "ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால் அது அவர்களின் பெருமையை சிறிதும் குலைக்காத வகையில் இருக்க வேண்டும். மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்திய அரசியல் உலகில் ஒரு தனிப் பெயர் உண்டு. அதைப் படமாக எடுக்கிறோம் என இந்தப் படைப்பாளிகள் அவரின் பெருமையைக் குலைத்துவிடக் கூடாது என்பதே அவரது அபிமானிகளின் விருப்பமாக உள்ளது." எப்படித்தான் கை கூசாமல் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. மறந்துவிட வேண்டாம், பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றைக் கூடத்தான் திரைப்படமாக எடுத்தார்கள்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in