சினிமாவாகும் ஜெய்சங்கர் வாழ்க்கை | காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள் | மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? |
கேரளாவை சேர்ந்தவர் அஞ்சலி அமீர். திருநங்கையாக இருந்தாலும் மாடல் அழகி மற்றும் நடனத்தில் புகழ் பெற்றிருந்தார். திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதன் பிறகு சுவர்ண புருஷன் என்ற படத்தில் நடித்தார். தற்போது பல மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில் அஞ்சலி அமீரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதனை டினே ஜார்ஜ் இயக்குகிறார். அஞ்சலியின் இளம் வயது வாழ்க்கை, கல்வி, மாடல் அழகியாகி சினிமாவுக்கு வந்தது உள்ளிட்ட அம்சங்கள் படத்தில் இடம் பெறுகின்றன. மாடலாக இருக்கும் திருநங்கை ஆணாகவும், பெண்ணாகவும் சினிமாவில் நடிப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர். திருநங்கைகள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளும் படத்தில் இடம்பெறுகிறது.
இதில் அஞ்சலி அமீர் வேடத்தில் அவரே நடிக்கிறார் இதுகுறித்து அஞ்சலி அமீர் கூறியதாவது: எனது வாழ்க்கை படமாவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என்றார். 2020 மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.