சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்துள் படம் இரண்டாம் உலக்ப் போரின் கடைசி குண்டு. ஆனந்தி, ரித்விகா என இரு கதாநாயகிகள், இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது.
தினேஷ் பேசுகையில், எனக்கு படத்தின் பிசினஸ் பற்றியும் தெரியாது. சக்ஸஸ் பிசினஸ் குறித்தும் தெரியாது. ஒரு படம் வெற்றி பெற்றதற்குப் பின், பேசும்போது, சந்தோஷமாக இருக்கும் மனது தெம்பு கூடும். இந்தப் படத்துக்காக, பணியாற்றிய பலரும் கடினமாக உழைத்துள்ளோம். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, சில நாட்கள் எனது மூக்கில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. இரும்புக் கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அப்படி வேலை செய்யும் நபர்கள், ஏழு - எட்டு ஆண்டுகளில் மரணமடைந்து விடுவர் என இயக்குநர் அதியன் கூறியது, எனக்குள் வலி ஏற்படுத்தியது என்றார்.