Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பெண் என்பதால் வாய்ப்புத் தர மறுத்தார்கள்: புதுமுகம் ரியா வருத்தம்

22 நவ, 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
No-oppurtunity-for-Tamil-girls-in-movies-says-Actress-Reeya

மேகி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ரியா. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் வாய்ப்பு தர மறுத்தார்கள்என்கிறார் ரியா. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமா என்றால் இஷ்டம். நிறைய படங்கள் பார்ப்பேன். சிறு வயதிலேயே மாடலிங் சினிமா என்று தோன்றி நடிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு. ப்ளஸ் டூ முடித்த பின் என் விருப்பத்தை அம்மாவிடம் கூறினேன். அவர் உடன்படவில்லை. எப்படியாவது என்னைத் திசை மாற்ற வேண்டுமென்று "நீ ஒரு டிகிரி முடித்து விட்டு வா. அப்புறம் பார்க்கலாம்" என்றார்.

அதன்படி நான் பி.எஸ்.சி முடித்து மீண்டும் இதைக் கேட்டபோது "இன்னொரு மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு வா" என்றார். ஆனால் நான் விடவில்லை. "படித்துக்கொண்டே நடிக்கிறேன் பரவாயில்லை" என்றேன்.

சினிமாவில் ஒரு பக்கம் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இயக்குநர் கார்த்திகேயனை சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி, "நீங்கள் தமிழ்ப் பெண்ணா?" என்றார். ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி வாய்ப்பு தேடி போகிற இடங்களில் நான் தமிழ்ப் பெண் என்றவுடன் வாய்ப்பு தரமுடியாது என்று சொல்லிவிடுவார்கள். இவரும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.

இருந்தாலும் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று "நான் தமிழ்ப் பெண் தான்" என்றேன். அவர் சிரித்தார். "தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பெண்ணைத்தான் என் படத்திற்கு தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றார். என்னால் நம்ப முடியவில்லை. சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை. எப்படி இது என்று ஆச்சரியமாக இருந்தது. இரண்டு நாளில் மீண்டும் அழைத்து மேகி படத்தின் கதையைக் கூறினார். நடிக்க வாய்ப்பும் கொடுத்தனர். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டாக்டர் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பாராட்டுடாக்டர் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் ... சமூக பொறுப்புள்ள வேடங்களில் நடிக்க ராஷி கண்ணா ஆசை சமூக பொறுப்புள்ள வேடங்களில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in