மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ‛வலிமை படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதனால் அஜித்தின் கெட்டப் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்கள் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின.
அஜித் ஹேர் ஸ்டைல் வழக்கம்போல இல்லாமல் சற்றே ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் அதே சமயத்தில் படத்தின் டைட்டிலான வலிமை என்பதை குறிக்கும் விதமாகவே வி வடிவத்தில் இருப்பது ரசிகர்களை இன்னும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.. அதேசமயம் அவர் இதுவரை வைத்திராத ஒரு புதிய பாணியில் தொங்கு மீசை வைத்திருப்பதும் இன்னொரு ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.