பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
இயக்குனர் ரஞ்சித்தின் ‛நீலம் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
விழாவில், இயக்குநர் அதியன் ஆதிரை பேசியதாவது: தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது.
இந்தப்படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை உணர்த்தும். இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்த பிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. என்றார்.