Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியர் ஆனார் ராஜ்கிரண்

21 நவ, 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Rajkiran-turn-as-Lyricist

விநியோகஸ்தராக வாழ்க்கையை தொடங்கிய ராஜ்கிரண், அதன் பிறகு நடிகர் ஆனார், இயக்குனர் ஆனார், தயாரிப்பாளர் ஆனார். இப்போது அடுத்த கட்டமாக பாடலாசிரியராகவும் ஆகியுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் ஷைலாக் என்ற படத்தை தமிழில் குபேரன் என்கிற பெயரில் சொந்தமாக வெளியிடுகிறார் ராஜ்கிரண்.

இந்த படத்தின் தமிழ் வசனத்தை அவர் எழுதியிருப்பதோடு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளிட்டுள்ள ராஜ்கிரண் ஒரு பாடலையும் வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது:

இறை அருளால், என், சில படங்களுக்கு நான் வசனம் எழுதியிருந்தாலும், முதன் முறையாக, குபேரன் படத்துக்குத்தான், வசனத்தோடு, பாடலும் எழுதியிருக்கிறேன். கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல் இது.

(பல்லவி)
மாணிக்கக்கிளியே
மரகதக்குயிலே
தூவுங்கள் பூவை
ஜோடிப்புறாக்கள் இணைகிறதே

மாங்கல்யம் பூண
மணமகள் நாண
மங்கலம் காண
வாழ்க வாழ்கவென வாழ்த்துங்களே

வெண்ணிலவும் நட்சத்திரக்
கூட்டங்களுமாய்....
சொந்தங்களும் பந்தங்களும்
பெருகணுமே...

கல்யாண மேளம்
காற்றோடு இசைக்கிறதே...
மீனாட்சியம்மன்
கல்யாண வைபோகமே...

உள்ளங்கள் யாவும்
சந்தோசம் பொழிகிறதே...
காமாட்சியம்மன்
சீரோடு வரம்தரும் நேரம் இதா...

(மாணிக்கக்கிளியே)

(சரணம்)

சாஹரங்களாகும் உந்தன்
கருங்கூந்தலில்...
ஆலிங்கன ராகம் பெண்ணே
இதழ் மூட வா...

கண்ணாளனே என் ஜென்மமும்...ஓ
என் வாழ்க்கையும் உன் சொந்தமே... ஹோ

என் ரோசக்காரப்புயலே
என்னாசை தூண்டும் தணலே
என் நேசம் காக்கும் நிழலே
மன வானில் ஆடும் மயிலே
ஆராருங்காணா ஒயிலே

பொன் தேகம் முழுவதும்
நீந்தி சுகம் பெற
திருமகள் விழியுறங்க...

மாணிக்கக்கிளியே
மரகதக்குயிலே
தூவுங்கள் பூவை
ஜோடிப்புறாக்கள் இணைகிறதே

வெண்ணிலவும் நட்சத்திரக்
கூட்டங்களுமாய்...
சொந்தங்களும் பந்தங்களும்
பெருகணுமே...

கல்யாண மேளம்
காற்றோடு இசைக்கிறதே...
மீனாட்சியம்மன்
கல்யாண வைபோகமே...

உள்ளங்கள் யாவும்
சந்தோசம் பொழிகிறதே
காமாட்சியம்மன்
சீரோடு வரம்தரும் நேரம் இதா...

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் வனிதா விஜயகுமார்யூ-டியூப் சேனல் ஆரம்பிக்கும் வனிதா ... குண்டு படத்தில் இரும்புக்கடை தொழிலாளர்களின் வாழ்க்கை: இயக்குனர் குண்டு படத்தில் இரும்புக்கடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22 நவ, 2019 - 15:44 Report Abuse
Vasudevan Srinivasan சூப்பர் ராஜ்கிரண் சார்.. தயவுசெய்து தாங்கள் (திரு. ராஜ்கிரண்) மீண்டும் இசைஞானியுடன் இணைந்து தமிழ் திரையுலகில் காணாமல் போய்விட்ட உண்மையான இசையை மீண்டும் கொடுக்க வேண்டும்.. முன்பெல்லாம் ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது படத்தில் பாடல்களை முணுமுண்ட்துக்கொண்டே வருவது வழக்கம் காரணம் பாடல்களும் இசையும் மனமொத்த தம்பதிகளை போல இணைந்து இருக்கும்.. ஆனால் இன்று ஒரு எழவும் புரிவதில்லை ஒரே மாதிரியான இசை ஒரே இரைச்சல்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in