இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா |
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். இந்தப் படத்தை நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தை அடுத்து, அதே படக்குழு மீண்டும் வலிமை என்ற படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், நடிகர் அஜித், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனால், வில்லனை துரத்தும் கார் சேசிங் காட்சிகள், படத்தில் நிறைய இடம்பெறுகிறது.
இதனால், கார் சேசிங் காட்சிகளை சிறப்பாக அமைத்துத் தரும் ஹாலிவுட் கலைஞர்களை அழைத்து வந்து படமாக்க, படக் குழு முடிவெடுத்திருக்கிறது. இதற்காக, ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகளை அமைத்துத் தரும் ஹென் கோலின்ஸ் என்பவரை தமிழகம் அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் ஓ.கே., சொல்லி, தமிழகம் வந்ததும், அதிரடியான கார் சேசிங் காட்சிகள் சென்னை மற்றும் புறநகரில் வைத்து படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.