Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழியாத கோலங்கள் 2வின் கதை

20 நவ, 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Story-of-Azhiyatha-kolangal-2

பாலுமகேந்திராவின் உதவியாளர் எம்.ஆர்.பாரதி இயக்கி உள்ள படம் அழியாத கோலங்கள் 2. இதில் அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளர். அரவிந்த் சித்தார்த் இசை அமைத்துள்ளார். வள்ளியம்மை அழகப்பன் தயாரித்துள்ளார். படம் வருகிற 29ந் தேதி வெளிவருகிறது.

படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாரதி கூறியதாவது: எனது குரு பாலு மகேந்திராவின் நினைவாக இந்த படத்திற்கு " அழியாத கோலங்கள் 2" என்று பெயர் வைத்துள்ளேன். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்திற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஒரு வங்காள திரைப்படத்தின் தழுவல்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் (பிரகாஷ்ராஜ்), தனது கல்லூரி பருவத்து காதலியை(அர்ச்சனா) பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறான். காதலி அவரது கணவனை இழந்து தனியே வசிக்கிறார். 24 வருடங்களுக்கு பின் சந்திக்க வரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள்.

எழுத்துலகில் தான் பெற்ற அத்தனை சிறப்புகளுக்கும் நீதான் காரணம் என்பதை சொல்கிறான். காதலனுக்கு அன்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறான். அதன் பின் காதலி என்ன ஆனாள் அவளை இந்த சமூகம் எப்படி எடுத்துக் கொள்கிறது, காதலன் மனைவி (ரேவதி) என்ன செய்யப்போகிறார் என்பதை ஒரு இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி உள்ளேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா நட்பைவிட மக்கள் நலனுக்காக இணைவோம்: கமல் நட்பைவிட மக்கள் நலனுக்காக இணைவோம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in