விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
மறைந்த நடிகர் நாகேஸ்வரராவின் பெயரில் ஏ.என்.ஆர்., விருதினை சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறார் நடிகர் நாகார்ஜூனா. கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டிற்கான விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஹிந்தி நடிகை ரேகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளைசிரஞ்சீவி வழங்கினார். ரேகா நேரில் வந்து விருது பெற்றுக்கொள்ள, ஸ்ரீதேவி சார்பாக அவரது கணவர் போனிகபூர் விருதினை பெற்றுக் கொண்டார்.
சிரஞ்சீவி பேசுகையில், ‛‛நான் ரேகாவின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு அழகான நடிகை. என் மனைவியின் பெயர் சுரேகா. ஆனால் ரேகாவின் மீது கொண்ட அபிமானத்தின் காரணமாக என் மனைவியை ரேகா என்று தான் அழைப்பேன் என்றார்.
இதையடுத்து ரேகா பேசுகையில், ‛‛நான் இங்கு பல ஆண்டுகளாக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கழித்தேன். நாகேஸ்வரராவ் எனக்கு நடிப்பின் வழிகாட்டியாக இருந்தார். அவரது வார்த்தைகள் எனது வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருந்தன. நான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது அம்மாவின் கடைசி விருப்பம். அதனால் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்றார் ரேகா.