Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு, ஹிந்தி போல வெற்றியைப் பெறுமா 'ஆதித்ய வர்மா' ?

19 நவ, 2019 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Did-Adithya-Varma-will-success-like-Telugu-and-Hindi

தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்க 2017ம் ஆண்டு வெளிவந்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. அங்கு பெரிய வெற்றியைப் பெற்று 50 கோடி வரை வசூலித்தது.

ஹிந்தியில் அதே சந்தீப் வங்கா இயக்கத்தில் ஷாகித் கபூர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்க இந்த ஆண்டு ஜுன் மாதம் வெளிவந்து பெரிய வெற்றியையும், சுமார் 300 கோடி வரை வசூலையும் குவித்தது.

தமிழில் முதலில் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் படத்தை எடுத்து முடித்து பார்த்தபின் அந்தப் படம் நன்றாக இல்லை என அதை அப்படியே தூக்கிப் போட்டார்கள். பின்னர் தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவியாளராக கிரீசய்யா இயக்க, தமிழில் 'ஆதித்ய வர்மா' என மீண்டும் எடுத்து முடித்தார்கள். இப்படம் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படம் மூலம் நாயகனாகவும், ஹிந்தியில் 'அக்டோபர்' படத்தில் நாயகியாக அறிமுகமான பனிதா சாந்து இப்படத்தில் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள்.

தெலுங்கை விட ஹிந்தியில் பெரிய வசூலைக் குவித்த படம், தமிழில் ஹிந்தி அளவிற்கு வசூலைக் குவிக்க முடியாது. இருப்பினும் தெலுங்கு வசூலையாவது நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இப்படத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகவே நடிகர் விக்ரமும், அவருடைய மகன் துருவ் விக்ரமும் ஊர் ஊராகச் சென்று பிரமோஷன் செய்து வருகிறார்கள்.

விக்ரமிற்கு ஒரு அதிரடியான, வித்தியாசமான கல்லூரிக் கதையான 'சேது' படம் தான் திருப்புமுனையைத் தந்தது. அவரது மகன் துருவ் விக்ரம் ஒரு கல்லூரிக் காதல் கதை மூலம் தான் அறிமுமாகிறார். அப்பாவுக்குக் கை கொடுத்த கல்லூரிக் காதல் அவருக்குக் கை கொடுக்குமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தி மிராக்கிள் சீசன் படத்திலிருந்து காப்பியடித்த அட்லிதி மிராக்கிள் சீசன் படத்திலிருந்து ... பிகில் வசூல் ரூ.142 கோடியாம் பிகில் வசூல் ரூ.142 கோடியாம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in