Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தி மிராக்கிள் சீசன் படத்திலிருந்து காப்பியடித்த அட்லி

19 நவ, 2019 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Bigil-copy-from-hollywood-movie

விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்த பிகில் படத்தை இயக்கிய அட்லி மீது எப்போதுமே காப்பி அடிப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவருடைய ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்கள் இதற்கு முன்பு வெளிவந்த சில தமிழ்ப் படங்களிலிருந்து கதை உருவப்பட்டு படமாக்கப்பட்டவை என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். பிகில் படத்தின் கதையும் வேறு ஒரு உதவி இயக்குனருடையது என்று வழக்கும் தொடரப்பட்டது.

பிகில் படம் கால்பந்து விளையாட்டு சம்பந்தப்பட்டது. இந்தப் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை அவர் ஹாலிவுட் படங்களிலிருந்து காப்பியடித்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகள் வரும். அந்த வரிசையில் ஒரு டுவிட்டர் பயனாளர் தி மிராக்கிள் சீசன் என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியின் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார்.

தி மிராக்கிள் சீசன் படம் வாலிபாலை மையப்படுத்திய படம். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் சர்வீஸ் ஒழுங்காகப் போட மைதானத்திற்குள் ஒரு ஜாக்கெட்டை வைத்துவிட்டு அதன் மீது பந்து விழுமாறு வீராங்கனைகளின் கோச் சொல்வார். சரியாக அடிக்காத போது மைதானத்திற்குள் ஓட வேண்டும் என்ற தண்டனை கொடுப்பார். ஒரு கட்டத்தில் சோர்வடையும் போது ஒரு வீராங்கனை சரியாக அடிப்பார்.

அது போன்ற ஒரு காட்சியை அப்படியே பிகில் படத்தில் மாற்றி எடுத்திருப்பார்கள். வீராங்கனைகளுக்கு கோச் ஆக பொறுப்பேற்கும் விஜய், கோல் போஸ்ட்டில் நான்கு மூலைகளில் ஒரு கட்டம் வைத்து அதற்குள் பந்து விழும்படியாக கோல் அடிக்க வேண்டும் என்று சொல்வார். இந்தக் காட்சி அப்படியே தி மிராக்கிள் சீசன் படத்திலிருந்து உருவப்பட்டுள்ளது. கைப்பந்தை கால்பந்தாக மாற்றியிருக்கிறார்கள் அதுதான் வித்தியாசம்.

டுவிட்டரில் அந்த பதிவிற்கு கடுமையான கமெண்ட்டுகளும், வீடியோவிற்கு அதிகமான பார்வைகளும் கிடைத்துள்ளன. மேலும் இதை வைத்து நிறைய மீம்ஸ்களும் வெளியாகி உள்ளன. அதாவது பிகில் பற்றி அட்லி முன்பு பேசும்போது, ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படமாக்கி உள்ளோம் என கூறியிருந்தார். இதை அப்படியே இந்த காப்பிக்கு பதிவிட்டு நீங்கள் பார்த்து பார்த்து படமாக்கியது என சொன்னது இதைத்தானா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.




Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் திருநங்கையாகநடிக்க ஆசை!மீண்டும் திருநங்கையாகநடிக்க ஆசை! தெலுங்கு, ஹிந்தி போல வெற்றியைப் பெறுமா 'ஆதித்ய வர்மா' ? தெலுங்கு, ஹிந்தி போல வெற்றியைப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23 நவ, 2019 - 05:02 Report Abuse
J.V. Iyer காப்பிதான்.. ஆனா ஈயடிச்சான் காப்பி இல்லை தளபதி. எனவே மன்னிக்கலாம்.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21 நவ, 2019 - 16:47 Report Abuse
Cheran Perumal படம் எடுக்குமுன் ஒரு ஐந்தாறு ஹாலிவுட் படங்களையும் சில பல தமிழ் படங்களையும் பார்த்து விட்டு அவற்றிலிருந்து காட்சிகளை உருவி திரைக்கதையாக்கும் ஹைடெக் இயக்குனர்கள் இவர்கள்.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21 நவ, 2019 - 10:02 Report Abuse
Parthasarathy Badrinarayanan இதில் தவறேதுமில்லை. ANDHA ஆங்கிலப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்த்திருப்பார்கள்/ வீணாக விளம்பரத்துக்காக செய்தி வெளியிட்டு பிழைக்க வேண்டாம். மற்ற மொழிகளில் உள்ள நல்ல காட்சிகளை தமிழர்களுக்கு காட்டிய இயக்குனருக்கு நன்றி.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
21 நவ, 2019 - 05:55 Report Abuse
meenakshisundaram நான்தான் உறுவினேன்னா அதை இந்த முட்டாள் ரசிகனுங்க எப்படியோ உருவி மீம்ஸ் போட்டுட்டாங்களே ன்னு அட்லீ நினைக்கலாம்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20 நவ, 2019 - 17:14 Report Abuse
Endrum Indian ஜெகஜ்ஜால கில்லாடிகள் காபி அடிப்பதில் , அதுவும் டாஸ்மாக் நாட்டு சினிமா என்றால் சொல்லவே வேண்டாமே
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in