Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நியூயார்க்கில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

18 நவ, 2019 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-celebrates-Birthday-with-Vignesh-shivan-in-NY

நடிகை நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் கொண்டாடினார்.

ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகி அறிமுகமாகி இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்பவர் நயன்தாரா. திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டபோதும் இன்றும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார். வெற்றி - தோல்வி என திரைவாழ்வில் அவர் கடந்து வந்த பாதைகள் ஏராளாம். சினிமாவில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதல் என்ற வலையில் நிறைய பிரச்னைகளை கடந்தே வந்துள்ளார். காதலுக்காக மதம் மாறினார், ஏன் சினிமாவை கூட தூக்கி ஏறிய துணிந்தார். ஆனால் அந்த காதல் முறிந்தபோது துவண்டு போகாமல், யார் என்ன பேசினாலும் கவலைப்படாமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி இன்று உச்சம் தொட்டுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் இவருக்கான மவுசு இன்றும் கூடிக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை. பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக இன்று சம்பளம் வாங்கும் ஒரே தென்னிந்திய நடிகை இவர் மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருபவர், அவர் உடனான காதலுக்கு பிறகு ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தாண்டு நியூயார்க்கில் கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவன் உடன் ஒரு ரொமான்டிக் போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நயன்தாரா.

அதோடு சமூகவலைதளங்களில் ஏராளமான பேர் நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமலை, விஜய்க்கு வழிவிட சொல்லும் எஸ்ஏசிரஜினி, கமலை, விஜய்க்கு வழிவிட ... நான் அழகு ராணி இல்லை: நமீதா நான் அழகு ராணி இல்லை: நமீதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

thonipuramVijay - Chennai,இந்தியா
22 நவ, 2019 - 00:34 Report Abuse
thonipuramVijay இந்த பூனை மண்டையன் கு நியூயார்க் ஒரு கேடா? நயன் கொஞ்சம் இந்த பூனை மண்டையனை விட்டுவிட்டு உங்க அழகுக்கு ஏற்ற அழகனை திருமணம் செய்துகொள்ளுங்கள்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
19 நவ, 2019 - 10:39 Report Abuse
A.George Alphonse நாடு சிறக்க,வளம்பெற ரொம்ப முக்கியமான செய்தி.வாழ்க தினமலர்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20 நவ, 2019 - 01:37Report Abuse
Aarkayரொம்ப முக்கியமில்லையா? அடுத்த sombuத்தூக்கி ரெடியா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in