Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சங்கத் தமிழனுக்காக அவமானங்களை தாங்கினேன்: வெளியிட்டவர் வேதனை

17 நவ, 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
libra-production-raventhar-emotional-talk-about-sanga-thamizhan

விஜயா புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். விஜய் சந்தர் இயக்கி இருந்தார். பல போராட்டங்களுக்கு பிறகு படம் நேற்று ஒரு வழியாக ரிலீசானது. இதுகுறித்து படத்தை வாங்கி வெளியிட்ட லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கிட்டத்தட்ட 48 மணி நேரம், பல பொய் குற்றச்சாட்டுகள், பல பொய்யான தகவல்கள் என் மீதும், என் லிப்ரா நிறுவனம் மீதும். இவையனைத்துக்கும் பதிலும் உண்மையும் தெரிந்தும், எதையும் பேசாமல், எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல், எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, விஜயா புரொடக்ஷன்ஸுக்கு நான் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற, பிரமாண்ட முறையில் விளம்பரப்படுத்தி 350க்கும் மேற்பட்டத் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம்.


இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் மற்றும் பாரதி ரெட்டிக்கும், இயக்குநர் விஜய் சந்தருக்கும் எங்கள் நன்றிகள். இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணனாக உதவிய பெடரேசன் தலைவர் அருள்பதி, அவருடன் சேர்ந்து உதவிய ஜேஎஸ்கே சதீஷ், தேனாண்டாள் முரளி, எச்.முரளிக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.


இதுவரை இல்லாத அளவு இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யலாம் எனப் போராடிக் கொண்டிருக்கும்போதே படத்துக்கு நெல்லையில் தடை, லிப்ரா கடனில் உள்ளது, இடையே விஜய் சேதுபதியின் என்றும் தீராத பிரச்சினையான பேட்டி, இவற்றுக்கு இடையே எங்களுடைய ஒரே நோக்கம், படத்தை வெளிக்கொண்டு வருவது மட்டுமே.


ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள், கேலிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள். ஆனால், எது நடந்தாலும், இந்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை.


ஒருவர் மீது எளிதாகக் குற்றம் சுமத்தி, கேலி செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவர்களுக்கான பதிலை காலம் நின்று சொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய ஒரே நோக்கம், எடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து, அதை சரியான இடத்துக்குக் கொண்டு செல்வது மட்டுமே. அதை எப்போதும் லிப்ரா செய்து கொண்டுதான் இருக்கும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வால்டர் படப்பிடிப்பு நிறைவுவால்டர் படப்பிடிப்பு நிறைவு சென்னையில் கொரியன் திரைப்படவிழா: 3 நாட்கள் நடக்கிறது சென்னையில் கொரியன் திரைப்படவிழா: 3 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 நவ, 2019 - 03:56 Report Abuse
J.V. Iyer சமீபத்தில் வந்த விஜய்சேதுபதி படங்கள் எல்லாமே பார்க்க சகிக்கவில்லை. யப்பா, சொந்த காசில் சூனியம் நிறைய வைத்துக்கொண்டாகிவிட்டது.
Rate this:
Tamil - chennai,இந்தியா
20 நவ, 2019 - 09:19 Report Abuse
Tamil ரெம்ப நாளா பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஆந்திரா கோல்டி தயாரிப்பாளர் தமிழக மனவாடை வைத்துமட்டும் தான் படமெடுக்கிறான். சசிகுமார் காலை பிடித்து வந்தவன் ஒருவன் மற்றொரு காமெடி பீசு தனுஷ் காலை புடித்து எறிவிட்டு மாஸ் ஹீரோ நினைப்பில் யாரையும் மதிப்பதில்லை இவர்கள் இருவரது பரவாயில்லை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இதை விட கொடுமை தெலுங்கு முன்னேற்ற கழகம் ஆந்திராவை சேர்ந்தவன் கர்நாடகாவில் பஞ்சம் பிழைக்க சென்றவனை இழுத்து வந்து தேர்தலில் நிற்கவைத்து நடிகர் சங்கத்துக்கு தலைவராக மாற்றியது அனைவர்க்கும் தெரியும். சம்பாதிக்கிறது சங்கதெலுங்கன் பெயர் மட்டும் சங்க தமிழன். படம் எப்படி ஓடும். தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழன் என்று எண்ணவேண்டாம். எட்டப்பன் பரம்பரை காரியம் ஆகும்வரை தான் காலை பிடிப்பான். அடுத்து தனுசு ஏற்பட்ட நிலைமை தான் அனைவர்க்கும்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
20 நவ, 2019 - 03:39 Report Abuse
RaajaRaja Cholan இனிமேல் விஜய் சேதுபதி யை நம்பி ரிவியூ படிக்காமல் படத்துக்கு போக முடியாது , விஜய் சேதுபதியிடம் இதை எதிர் பார்க்கவில்லை . படு படு மொக்கையான படம்
Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
19 நவ, 2019 - 11:53 Report Abuse
vasanthan இந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதை விட பெரிய அசிங்கம் வேறு இல்லை அப்படி ஒரு இத்து போன படம் இதற்கு இவ்வளவு பந்தா விளம்பரம் .. தியேட்டர்ல உட்கார முடியல்ல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in