'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
சத்யராஜ் வால்டர் வெற்றிவேல் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதே பாணியில் அவரது மகன் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் வால்டர். அவருடன் ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரகனி, கவுதம் மேனன், ஷனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யு.அன்பரசன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்புகள் கும்பகோணம் மற்றும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் கூறியதாவது:
ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் அன்பரசன் திரைகதையை சொன்னது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அழகாக படம்பிடித்துள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அயராது உழைப்பில் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டது. டப்பிங் பணிகளை இப்போது துவக்கியுள்ளது. போஸ்ட் புரடக்ஷன் பணிகளையும் தீவிரமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவோம். என்றார்.