Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்

15 நவ, 2019 - 19:05 IST
எழுத்தின் அளவு:
Sangathamizhan-issue:-Ajith,-Vijay-Fans-clash

சில பல பிரச்சினைகளால் விஜய் சேதுபதி நடித்து இன்று வெளிவருவதாக இருந்த 'சங்கத்தமிழன்' படம் வெளியாகவில்லை. பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இரவு வெளியாகும் என்கிறார்கள்.

'வீரம்' படத்திற்காக அதன் தயாரிப்பாளர் சில வினியோகஸ்தர்களுக்குத் தர வேண்டிய வரிவிலக்குத் தொகையை படத் தயாரிப்பு நிறுவனம் தரவில்லை அந்த காரணத்தால்தான் 'சங்கத்தமிழன்' வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அது குறித்து விஜய் ரசிகர்கள் 'வீரம்' பற்றியும், அஜித் பற்றியும் சமூக வலைத்தளங்களில் திட்டி பதிவிட ஆரம்பித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 'வீரம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் விஜய் நடித்த 'பைரவா' படத்தைத் தயாரித்து வெளியிட்டது. அதன் தோல்வியால்தான் இன்று நிதிப்பிரச்சினையில் அவர்கள் சிக்கி உள்ளார்கள் என அஜித் ரசிகர்கள் பதிவிட்டனர்.

கடந்த 70 வருடங்களாக தென்னிந்தியத் திரையுலகத்தில் எம்ஜிஆர், என்டிஆர், ராஜ்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாலகிருஷ்ணா, ஹிந்தியில் சஞ்சீவ்குமார், சசிகபூர் என பல பெரிய நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பற்றி எதுவுமே தெரியாமல் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தீவிர சினிமா ரசிகர்களால் பரிதாபப்பட மட்டுமே முடியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதிமூன்று மாதத்திற்கு பின் கலைமாமணி ... கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி' கார்த்தி - ஜோதிகா பட தலைப்பு ‛தம்பி'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in