இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ஹீரோ படத்தின் தயாரிப்புக்காக 24ஏஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, டிஆர்எஸ் என்ற நிறுவனத்திடம் 10 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் ராஜா ஹீரோவின் தயாரிப்பிலிருந்து விலகி விட்டு, அதனை கே.ஜே.ஆர் ஸ்டூடியோவிடம் கொடுத்து விட்டார். இந்த நிலையில் கடன் கொடுத்த டிஆர்எஸ் நிறுவனம், ராஜா மீது வழக்கு தொடர்ந்து ‛ஹீரோ' படத்திற்கு தடை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது படத்தை தயாரித்து வரும் ஜே.கே.ஆர் ஸ்டூடியோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் 'ஹீரோ' தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை. சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் 'ஹீரோ' என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது.
அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், 'ஹீரோ' படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர்.
எங்கள் திரைப்படம் 'ஹீரோ' தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஹீரோ படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் பிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.