திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் என்ற ஊரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பொன்னீலன். தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளியான இவர், நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரைகள் என இவரது படைப்பு மிகச்சிறந்த எழுத்தாளராக எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியது.
1976ல் வெளிவந்த கரிசல் என்ற நாவல் இப்போது திரைப்படமாகிறது, காமராஜ், அய்யாவழி, நதிகள் நனைவதில்லை படங்களை இயக்கிய நாஞ்சில் அன்பழகன் இயக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பிறந்து இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் பொன்னீலன். இவரது முதல் நாவலான கரிசல் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே, இந்நாவலை எனது வைகுண்டா சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்படமாக தயாரிக்க உள்ளேன். நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியலை சொல்கிற படமாக இருக்கும். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. டிசம்பர் மாத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.
எழுத்தாளர் பொன்னீலன் கூறியதாவது: எனது முதல் நாவலான கரிசல் நான்காண்டுகள் களப்பணி செய்து எழுதப்பட்டது. அதை தற்போது சினிமாவாக இயக்க விரும்பும் குமரி மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் பி.சி.அன்பழகனுக்கு வாழ்த்துக்கள். என்றார்.