விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
இசை அரசி என்று எல்லாராலும் பெருமையாக அழைக்கப்படும், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தன், 85 வது பிறந்த நாளை ரசிகர்களுடன், கேக் வெட்டி கொண்டாடினார்.
சென்னையில் நடந்த இந்த விழாவை, தினமலர் நாளிதழ் முன்னெடுத்து, அவரது ரசிகர்களுடன் கொண்டாடியது. விழாவில், மதுரை, தினமலர் வெளியீட்டாளர் முனைவர்.எல்.ராமசுப்பு, கோவை, தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர், பி.சுசீலாவிற்கு பரிசு கொடுத்து, பாராட்டி கவுரவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சுசீலாவின் ரசிகர்கள், அவருக்கு மலர் கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். கூடவே தங்களுக்கு சுசீலாவின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து, உணர்வு பூர்வமாக பேசினர்.
விழாவில், ஆடிட்டர் ருத்ரகுமார், கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், மதுரா டிராவல்ஸ் பாலன், நடிகை சத்யபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லஷ்மன் சுருதி அமைப்பாளர் லஷ்மன், தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியை முன்னிட்டு சுசீலா பற்றிய குறும் படம் திரையிடப்பட்டது; புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.