Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

தோல்வியை பற்றி கவலைப்படாதவனே வெற்றியாளன்: பார்த்திபன்

15 நவ, 2019 - 00:24 IST
எழுத்தின் அளவு:
The-winner-is-the-one-who-doesnt-care-about-defeat!

உலகமே திரும்பி பார்க்கும் வகையில், ஒத்த செருப்பு படத்தை கொடுத்த பன்முக கலைஞன் பார்த்திபன் உடன் பேசியதிலிருந்து:

ஒத்த செருப்பு மாதிரி ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பது உங்கள் வெறியாக இருந்ததா?


நான் உதவி இயக்குனராக இருந்து, இயக்குனரான போது, என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி எழுந்தது. சோற்றுக்காக என்றால், அதற்கு இவ்வளவு பாடுபட வேண்டாமே...பாக்யராஜ் சாரிடம் இருந்து வந்த நான், அவரை விட பெரிதாக செய்ய வேண்டும்; அதுதான் நான் அவருக்கு தரும் மரியாதை. நடிப்பை மட்டும் விட வேண்டாம் என, மறைந்த எழுத்தாளர் சுஜாதா என்னிடம் கூறியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை தான், ஒத்த செருப்பு மாதிரி ஒரு படம் வர காரணமாக இருந்தது.


தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், கிறுக்கன் இதில், பார்த்திபன் எதில் கெட்டிக்காரர்?


இவை அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்த விஷயம். மரம், பூக்களோடு அழகாக இருக்க வேர் காரணமா... கிளை காரணமா... என தனித்தனியே பிரித்து பார்ப்பதை விட, பூ அழகாக இருக்கிறது அல்லவா... அப்படி என் மனமும் பூ போல் பூரித்து போய் இருக்கிறது என்றால், அதன் பின்னணியில் இவை அனைத்தும் சேர்ந்ததே காரணம்.


இன்றைய சூழ்நிலையில் படம் வெற்றி பெற்றது என்பதை எப்படி மதிப்பிடுகின்றனர்?


பெரிய சம்பளமும், அப்படம் தரும் லாபமும், குறிப்பிட்ட ஒரு நபருக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இது சினிமாவுக்கான வளர்ச்சிக்கு, எந்த வகையிலும் நல்லது செய்வதாக நான் கருதவில்லை. சினிமாவுக்கு கமர்ஷியலும் அவசியம்; அதே வேளை, ஒத்த செருப்பு மாதிரியான படமும் முக்கியம். தோல்வியை பற்றி கவலைப்படாதவன் தான் மிகப்பெரிய வெற்றியாளன்; நானும் அப்படித் தான்.


உங்களுக்கு முதல் படமே தேசிய விருதை பெற்று தந்தது. மாறாக அப்படம் தோல்வியில் முடிந்திருந்தால், அடுத்த படத்தில் நீங்கள் நடித்திருப்பீர்களா?


சரியான கேள்வி தான். என் முதல் படம் வெற்றி பெறாவிட்டால், இரண்டாவது படத்தில் நானே நடித்திருக்க வாய்ப்பில்லை. நானும் ஏதோ ஒரு நடிகர் வீட்டின் முன், காலிங்பெல்லை அடித்து கொண்டிருப்பவர்களில் ஒருத்தனாகியிருப்பேன். என் முதல் படம் தோல்வியடைந்திருந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பேன்.


உங்களுடைய தங்கிலீஸ் பதிவுகளுக்கு, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலையா?


எனக்கு தமிழ் தெரியும். எங்கு அதை பயன்படுத்த வேண்டுமோ, அங்கு பயன்படுத்துவேன். எல்லாரும் வைரமுத்து மாதிரி தமிழ் நடையோடு பேசினால் ரசிக்க முடியாது. நான் மேடைக்கு போனால், கலந்து தான் பேசுகிறேன். விமர்சனங்கள் வரும், அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.




உங்களுடைய கடைசி நிமிடம் உங்களுக்கு முன்பே தெரிந்து விட்டால்...


பலரது மரணம், நம்மை ரொம்ப யோசிக்க வைக்கும். கண்ணதாசன், பாலச்சந்தருக்கெல்லாம் மரணமே வந்திருக்க கூடாது. இவர்கள் எல்லாம் சாஸ்வதமாக இருக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவுக்கு பின், அவர்கள் கொடுத்த படம் தான் மிச்சம். கடைசி நிமிடத்திற்கு முன் கிடைக்கும் குறைந்தபட்ச நேரத்தில் ஒரு குறும்படமாவது எடுப்பேன் அல்லது நாலு வரியில் ஒரு கவிதையாவது எழுதி விடுவேன்.


அரசியலில் உங்கள் ஆர்வம் எப்படி?


ஒத்த செருப்பு உட்பட, என் எல்லா படமும் அரசியல் பேசியது. சினிமாவிலேயே இன்னும் நான் நிறைவடையவில்லை. அரசியல் அனைவருக்கும் கண்டிப்பாக தேவை. அரசியல் மீதான நேசமும், பார்வையும் இருக்கிறது. அது எப்போது வெளிப்படும் என தெரியாது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆணுக்கு நிகர் பெண் இல்லை: 'டிவி' நடிகை கிருபாஆணுக்கு நிகர் பெண் இல்லை: 'டிவி' ... ஆதித்ய வர்மா டூ அர்ஜூன் ரெட்டி : மனம் திறக்கும் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா டூ அர்ஜூன் ரெட்டி : மனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 நவ, 2019 - 05:03 Report Abuse
meenakshisundaram பார்த்திபன் அண்ணா நமக்கு நாமே தான் தட்டிக்கொடுத்துக் கொள்ள வைக்குது தமிழ் cinema
Rate this:
Sampathkumar Sampath - Karur,இந்தியா
15 நவ, 2019 - 18:30 Report Abuse
Sampathkumar Sampath மிக சரியான பதில்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15 நவ, 2019 - 06:59 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒ. செ. 7 படம் மிக மிக சிறப்பான திரில்லர் படம். திரில்லர் படங்களுக்கு அஞ்சாதே ஒரு பரிமாணம் என்றால் ஒ. செ. 7 மற்றொரு புதிய பரிமாணம். பார்த்திபனின் புத்தம் புதிய பாதை. படம் ஆரம்பித்து முதல் முடியும் வரை விறிவிறுப்புக்கு பஞ்சமேயில்லை. காதல், அன்பு, பாசம், காதல், சோகம், அரசியல், நகைச்சுவை, திகில், பார்த்திபனுக்கே உரித்தான நையாண்டி குறையாமல் நினத்தது கிடைக்கும் அட்சய பாத்திரமாக மிளிர்கிறார். இவரை பெருமைப்படுத்தி சினிமாத்துறை பெருமை சேர்த்துக் கொள்ளணும். செய்யும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15 நவ, 2019 - 06:21 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒ. செ. 7 படம் மிக மிக சிறப்பான திரில்லர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in