தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் |
இயக்குநர் வெங்கட் பிரபு, வைபவ், வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'லாக்கப்' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்காக, இயக்குநர் மோகன் ராஜா, பின்னணியில் இருந்து நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். காரணம் - இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ், இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
முழுக்க முழுக்க காவல் துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக லாக்கப் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக, இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் படம் குறித்து தெரிவிக்கிறார். அதற்கேற்ப, படத்தின் டீசரையும் உருவாக்கி இருக்கின்றனர். 1.04 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த டீசரை பார்க்கும் போதே ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.