Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீட் சர்ச்சை தான் ‛விஜய் 64' கதையா?

14 நவ, 2019 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Vijay-64-story-leaked-in-social-medias

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ... அரசியல் ஆர்வம் உடையவராகவே இருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூகக் கருத்துக்களையும், சமூக அவலங்களையும் கண்டிப்பது போல வசனம் பேசுவதையும், காட்சிகள் அமைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் விஜய், ‛கத்தி' படத்தில் தண்ணீர் பிரச்னை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருந்தார்.

‛மெர்சல்' படத்தில் மருத்து முறைகேடு மற்றும் ஜி.எஸ்.டி., குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல ‛சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க அரசியலே பேசினார். ஓட்டளிப்பதில் இருக்கும் முறைகேடுகளையெல்லாம் தோலுரித்து காட்டிய நடிகர் விஜய், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயன்றார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடக்கிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படங்களும் அதை உறுதி செய்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் கதை என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய கல்வி முறையை சாடும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளதாம். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், நீட்டிற்கு எதிரான காட்சி அமைப்புகளையும், வசனங்களும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
வெப்சீரிஸில் ஹன்சிகாவெப்சீரிஸில் ஹன்சிகா இடைக்கால தடை: சிக்கலில் சிவகார்த்திகேயனின் ‛ஹீரோ' படம் இடைக்கால தடை: சிக்கலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

meenakshisundaram - bangalore,இந்தியா
17 நவ, 2019 - 05:07 Report Abuse
meenakshisundaram அப்போ இந்த படம் ஊத்திக்கிடுமா ?ஏனெறால் 'நீட்' அனிதா வின் கதையை ஆளாளுக்கு நம்ம ஊர்லே ஓடாவிட்டாச்சே அதுலே எங்கிருக்கு சஸ்பென்ஸ் ?
Rate this:
15 நவ, 2019 - 10:45 Report Abuse
ilaiyaraja muthu bigil nu oru mokka padathayae.... arasiyal pesi oda vachu paarthaan.....nadakala........ aduthathu NEET a......Fraud paya......
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
15 நவ, 2019 - 01:41 Report Abuse
uthappa இதெல்லாம் கடந்த ஐந்து வருடங்களுக்கு சரி, மக்கள் இப்போது அதிகமாக அரசியல் அறிந்து வைத்துள்ளார்கள்.அந்த இருபது விழுக்காடு மக்களிடம் இருந்தாவது கறந்து விடவே இவர் இப்படிப்பட்ட அரசியலை பேசுகிறார். எப்படியோ இவரின் கல்லா நிறையுது.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 நவ, 2019 - 00:28 Report Abuse
Aarkay அடக்கடவுளே இந்த அரைகுறை பஞ்ச் டயலாக் பேசி, மாமேதை போல எங்களுக்கு என்னெல்லாம் பாடம் எடுக்கப்போவுதோ ஆண்டவா காப்பாற்று
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14 நவ, 2019 - 23:41 Report Abuse
தாண்டவக்கோன் //தற்போதைய கல்வி முறையை சாடும்// Sooooopper 👌👌👌👌அட்டகத்தியான் கூட்டத்துக்கு இப்பமே வவுத்துல கடாமுடா ஆய்ண்டுருக்கு 👏👏👏😂😂😂
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in