Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் கற்பது கடினமாக உள்ளது: கங்கனா

14 நவ, 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
Learning-tamil-is-tough-says-Kangana-Ranuat

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். விஜய் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 10ல் ஆரம்பமானது.

இப்படத்திற்காக நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்றார் கங்கனா. அடுத்து படத்திற்காக தமிழ் கற்க ஆரம்பித்துள்ளாராம். அது பற்றி மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்திருக்கிறார்.

“தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுகிறேன். முன்பே தமிழ் கற்க ஆசைப்பட்டேன். ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது 'தலைவி' படத்திற்கு தமிழ் கற்க வேண்டியது அவசியம் என்பதால் கற்று வருகிறேன்,” என்றார்.

எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்த சில ஹிந்தி நடிகைகள் இதுவரையிலும் தமிழில் வணக்கம் தவிர வேறு எந்த வார்த்தையையும் பேசியதில்லை. ஆனால், 'தாம் தூம்' படத்திற்குப் பிறகு இரண்டாவது தமிழ்ப் படத்தில் நடிக்கும் கங்கனா, 'தலைவி'க்காக தமிழ் கற்க ஆரம்பித்திருப்பது அவருடைய ஈடுபாட்டைக் காட்டுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
‛சுசிலீக்ஸ் சுசித்ராவால் மீண்டும் பரபரப்பு‛சுசிலீக்ஸ் சுசித்ராவால் மீண்டும் ... வெளிநாடுகளில் ஒரு நாளைக்கு முன்பே வெளியாகும் ஆதித்ய வர்மா வெளிநாடுகளில் ஒரு நாளைக்கு முன்பே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 நவ, 2019 - 19:34 Report Abuse
Mirthika Sathiamoorthi இங்கமட்டும் என்ன வாழுதாம்? எங்களுக்கு மட்டும் ஹிந்தி கத்துகிறது ரொம்ப ஈசியாவா இருக்கு…? அதுதான் காசு வாங்குறீல படிச்சு தொலைக்கவேண்டியதுதானே...எங்களை மாதிரி ஓசில படிக்கணும்ன்னு ஆசைப்பட்ட முடியுமா?
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
14 நவ, 2019 - 18:21 Report Abuse
Chandrasekar Ganesh சுடலைக்கும் இதே பிரச்சனைதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in