Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்பதிவில் தடுமாறும் 'ஆக்ஷன், சங்கத்தமிழன்'

14 நவ, 2019 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Action,-Sangathamizhan-reservation-dull

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டும்தான் முன்பதிவில் வரவேற்பு இருக்கிறது. அடுத்த கட்ட நடிகர்களுக்கும், சிறிய படங்களுக்கும் வரவேற்பு அதிகம் இருப்பதில்லை என்பது கடந்த சில வருடங்களாகவே இருக்கிறது.

புதிய படங்கள் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே முன்பதிவுகள் ஆரம்பமாகும். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு மட்டுமே இரண்டு, மூன்று நாட்களுக்காவது முன்பதிவு சிறப்பாக நடந்து விடும். விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' படத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பதிவு மிகவும் பிரமாதமாக இருந்தது என்பதும் உண்மை.

நாளை விஷால் நடித்து வெளிவர உள்ள 'ஆக்ஷன்', விஜய் சேதுபதி நடித்து வெளிவர உள்ள 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களுக்கான முன்பதிவு மிகவும் தடுமாற்றமாக உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்த போது 'ஆக்ஷன்' படத்திற்கு மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது. நாளை மாலை காட்சியில் கூட பல தியேட்டர்களில் இரண்டு வரிசை கூட முன்பதிவு ஆகவில்லை. 50 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று சொல்கிறார்கள்.

50 கோடி ஆக்ஷன் படத்திற்கு இந்த நிலைமை என்றால் 'சங்கத்தமிழன்' பற்றி சொல்லவா வேண்டும். 'சங்கத்தமிழன்' படத்திற்கு ஒரே ஒரு இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு ஆரம்பித்துள்ளார்கள்.

திரையுலகில் இது பற்றி விசாரித்த போது, சமீபத்தில்தான் 'பிகில், கைதி' படங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து அந்தப் படங்களைப் பார்த்தார்கள். மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவர்கள் மீண்டும் அப்படியே தியேட்டர் பக்கம் வருவார்கள் என்று சொல்ல முடியாது. படங்கள் வெளிவந்து நன்றாக இருக்கிறது என்ற செய்தி பரவினால் மட்டுமே அவர்கள் படம் பார்க்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்பே காப்பாற்றுகிறது: சோனாநடிப்பே காப்பாற்றுகிறது: சோனா ‛சுசிலீக்ஸ் சுசித்ராவால் மீண்டும் பரபரப்பு ‛சுசிலீக்ஸ் சுசித்ராவால் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
15 நவ, 2019 - 01:07 Report Abuse
Aarkay அண்டப்புளுகு ஆகாசப்புளுகு bigil படத்திற்கு கூட்டம், கூட்டமாய் குடும்பத்துடன் வந்தார்களாம் இந்தப்படத்துக்கு யாராவது, குடும்பத்துடன் செல்வார்களா? குவாட்டருக்கும், பிரியாணிக்கும் விலைபோன விசிலடிச்சான் குஞ்சுகள்தான் எதோ சொற்பமாய் கண்ணில் பட்டனர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in