யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பிகில். இது பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்டது. தற்போது கதிர், யோகி பாபு நடிக்கும் ஜடா என்கிற படமும் கால்பந்து போட்டியை மையமாக கொண்டு வெளிவருகிறது. சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார், ஏ.ஆர்.சூரியா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டிருந்தாலும் பிகில் படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார் இயக்குனர் குமரன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாது: வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றி பெற்ற பிகில் படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது .
தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த யதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம்.
திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்பதே கதை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாக இருக்கும். என்கிறார்.