யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
கடந்த, 2015ல் நடந்த நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையிலான, 'பாண்டவர் அணி' வெற்றி பெற்று, நிர்வாகத்தை கவனித்து வந்தது. பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, சில மாதங்களுக்கு முன், தேர்தல் நடந்தது. ஆனால், முடிவுகளை அறிவிக்க நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், சங்க பணிகளை கவனிக்க, சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. 'விஷாலின் அரசியல் நடவடிக்கை காரணமாகவே இப்படி நடந்ததாக கருதும் பாண்டவர் அணியினர், அவரை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துள்ளனர்' என, தகவல் வெளியானது.
இது குறித்து, பாண்டவர் அணியின் முக்கிய பிரமுகரான பூச்சி முருகன் கூறியதாவது: எங்கள் அணியிலும், எதிர் அணியிலும் உள்ள பலர், பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனர். அது அவரவர் விருப்பம். மற்றபடி அரசியலுக்கும், சங்கத்துக்கும் தொடர்பில்லை. விஷாலை நாங்கள் ஒதுக்குவதாக வெளியான தகவல், உண்மைக்கு மாறானது. எப்போதும் அவரது தலைமையில் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.