பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
'டுவிட்டர் டிரெண்டிங்' என்ற ஒரு விஷயத்தால் இங்கு நடக்கும் மோதல்களுக்குக் கணக்கே இருக்காது. நிமிடத்துக்கொரு டிரெண்டிங்கும், மோதலுமாகவே கடந்து போய்க் கொண்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு டுவிட்டரில் 2019ல் இந்திய அளவில் 'விஸ்வாசம்' படம்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்ததாக ஒரு தகவல் பரவியது. அதைப் பெருமையாக அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்க நேற்று காலை வரை அந்த சண்டை நீடித்தது.
எரியும் தீயும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக, டுவிட்டர் இந்தியா தரப்பில் 'விஸ்வாசம்' முதல் இடத்தைப் பிடிக்கவில்லை. இந்த ஆண்டு முடியும் வரை யார் நம்பர் 1 என்பதைத் தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும் என அறிவித்தது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, அவர்கள் பங்கிற்கு ஒரு சண்டையை மூட்டி விட்டனர். 'விஸ்வாசம், பிகில், என்ஜிகே' இவற்றில் எந்தப் படம் இந்த வருடப் பட்டியலில் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என ஒரு ஓட்டு பதிவை நடத்தியது.
நேற்று இரவுடன் முடிவடைந்த அந்த வாக்குப் பதிவில் 2,55,228 பேர் அவர்களது ஓட்டை பதிவு செய்துள்ளனர். 'விஸ்வாசம்' படத்திற்கு 44 சதவீத வாக்குகளும், 'பிகில்' படத்திற்கு 40 சதவீத வாக்குகுளும், 'என்ஜிகே' படத்திற்கு 14 சதவீத வாக்குகளும், ரசிகர்களின் விருப்பத் தேர்வுக்கு 2 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதன் மூலம் 'விஸ்வாசம்' படத்திடம் 'பிகில்' படம் தோற்றுப் போயுள்ளது. இருந்தாலும் இந்த ஆண்டு முடிய இன்னும் 45 நாட்கள் இருப்பதால் மீண்டும் 'விஸ்வாசம், பிகில்' வார்த்தைகளை ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தி ஆண்டு கடைசியில் வெற்றி பெற வைக்கப் போராடுவார்கள்.
ம்ம்ம்ம்... எப்படியெல்லாம் விஜய், அஜித் ரசிகர்களை வம்பிழுக்கறாங்க...