மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் அதிகம் பயன்படுத்துவது டுவிட்டர். இதில் தான் டிரெண்டிங் என்பதை வைத்து கொண்டு ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இந்த டிரெண்டிங் விஷயத்தில் அடிக்கடி மோதல்கள் நடக்கும்.
இந்த ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம், அடுத்து நடிக்கப் போகும் வலிமை, விஜய் நடித்து வெளிவந்த பிகில், அடுத்து நடித்து வரும் விஜய் 64 ஆகிய படங்களைப் பற்றி டுவிட்டரில் இந்த ஆண்டில் இதுவரை பல டிரெண்டிங், பல மோதல்கள் நடந்து வந்துள்ளன.
2019ம் ஆண்டைப் பொறுத்தவரையில் விஸ்வாசம் #Viswasam என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் மிகவும் செல்வாக்குமிக்க தருணம் ஆக இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்த ஹேஷ்டேக்கைத்தான் பலரும் பயன்படுத்தி டுவீட் செய்துள்ளனர்.