நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் சிலர் தந்தை வழியில் நடிக்க வந்தாலும் சிலரின் வாரிசுகள் வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். நடிகர் மாதவனின் மகன் நீச்சல் வீரராக பல சாதனைகள் படைத்து வருகிறார். விஜய்யின் மகள் திவ்யா சாஷா பாட்மின்டன் வீராங்கணையாக வளர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சிபிராஜ் மகன் தீரன்.
தீரன், டேக்குவாண்டா சண்டை பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறான். புனேயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தேசிய போட்டியில் தீரன், 2 தங்க பதக்கங்களை பெற்று சாம்பியன் ஆகியிருக்கிறார்.
மகன் பதக்கத்துடன் நிற்கும் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் சிபிராஜ், "எனது மகன் தீரன் புனேயில் நடந்த டேக்குவாண்டோ சாம்பியன் ஷிப் 2019 போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தந்தையாய் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். சிபிராஜுக்கும், தீரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன