Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தி பாடிக்காக காத்திருக்கும் வேதிகா

11 நவ, 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Vedhika-in-Bollywood

மதராஸி படத்தில் அர்ஜுனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் வேதிகா. அதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவிய தலைவன், உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம் மலையாள படங்களிலும் நடித்தார்.

தற்போது தி பாடி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். இந்தப் படத்தை மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கி இருக்கிறார். இது புகழ்பெற்ற எல் கியூர்போ என்ற ஸ்பானிஷ் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

ஒரு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் இருந்து ஒரு பிணம் காணாமல் போகேிறது. அதை தேடும் போலீசாருக்கு அடுத்தடுத்து கிடைக்கும் அதிர்ச்சிகள் தான் படம். உலக த்ரில்லர் பட வரிசையில் இந்தப் படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

இதில் இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோருடன் வேதிகாவும் நடிக்கிறார். படம் வருகிற டிசம்பர் 13ந் தேதி வெளி வருகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்தவரான வேதிகா, தி பாடி படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி அடைந்தால் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட, கபில்தேவ் மாதிரியே இருக்காரே?அட, கபில்தேவ் மாதிரியே இருக்காரே? 'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது.... 'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது....

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in