Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' - டிரெண்டிங்கிற்காக ரூ.300 கோடி வசூல்

11 நவ, 2019 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Bigil-collection-Rs.300-only-in-Trending

ஒரு படத்தின் வசூல் என்ன என்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தரோ, அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களோதான் சொல்ல வேண்டும். அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் வெளிவந்த போது அதன் வினியோகஸ்தர் படத்தின் வசூல் என்ன என்பதை 100 கோடி கடந்ததும் வெளியிட்டார். அதன்பிறகு அவர்களே கூட படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

அஜித் படம் என்றதும் தானாகவே விஜய் படத்துடனான ஒப்பீடும் வந்துவிடும். விஜய் நடித்து இந்த தீபாவளிக்கு வெளிவந்த 'பிகில்' படம் 17 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடியை வசூலித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் டிரென்டிங்கில் கொண்டு வந்துள்ளார்கள்.

கார்த்தி நடித்து வெளிவந்த 'கைதி' படம் 100 கோடி வசூலைக் கடந்த செய்தி இன்று பரபரப்பானதும் தங்கள் பங்கிற்கு 'பிகில்' படம் பற்றி டிரென்டிங்கில் கொண்டு வர வேண்டுமேன இந்த 300 கோடி வசூலை டிரென்டிங்கில் கொண்டு வந்துள்ளார்கள். #BIGILHits300CrsInWW என்பதுதான் இன்றைய டிரென்டிங்.

2.0 படத்திற்குப் பிறகு 'பிகில்' படம்தான் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது என விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை சீக்கிரமே 'பிகில்' தயாரிப்பாளரோ, வினியோகஸ்தரோ தெரிவித்துவிட்டால் வீணான சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகிவிடும்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னா செம்ம ஹாட்தமன்னா செம்ம ஹாட் விஜய் படத்தில் குட்டி த்ரிஷா விஜய் படத்தில் குட்டி த்ரிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13 நவ, 2019 - 07:50 Report Abuse
ஆரூர் ரங் எதிர்பார்த்த வசூலை காண்பிக்க ஜோசப் விசை ரசிகர்கள் உடனே தினம் மூன்று, நான்கு ஷோ பிகில் பார்க்கணும் வீட்டு அஞ்சரரப்பெட்டி பஞ்சாரம் புளிப்பானை .அம்மா அப்பா ஆஸ்பத்திரிகாசு சேச்சிருக்கிற காசு அவ்வளவையும் கொடுத்துவது முன்னூறு கோடியை வரவெச்சிடுங்க தல ரசிகன் நொந்து நூடுல்ஸாகட்டும் . நம்ம வீடு எக்கேடு கேட்டா என்ன?
Rate this:
JMK - Madurai,இந்தியா
19 நவ, 2019 - 17:48Report Abuse
JMKகைதியிடம் செருப்படி வங்கியும் திருந்தாத வீனா போன விஜய் ரசிகர்கள் 300 கோடி இல்ல 3000 கோடி அளந்து விடுவானும்=ங்க ? படம் கோடி கூட தாண்டவில்லை என்பதே நிஜம் ?...
Rate this:
JMK - Madurai,இந்தியா
19 நவ, 2019 - 17:50Report Abuse
JMKபீகிள் வசூல் ஆயிரம் / ரெண்டாயிரம் / மூவாயிரம் மாமா பிசுக்கோத்து ? படம் அட்டர் பிளாப் ஆனாலும் லப்பரை தாங்கமுடியலை ?...
Rate this:
12 நவ, 2019 - 01:12 Report Abuse
Kathir Kathir 500கோடி.600கோடி நூறுநாள் வசூல் பிகில் ப்ளாக்பஸ்டர்ஹிட் சிரிப்புவருது
Rate this:
11 நவ, 2019 - 21:34 Report Abuse
prem Anand 25 days 500 crore vasool pannum thalapathy padam Vera level namma pullingo ellarum Marupadiyum muthalla irunthu verithanama paappanga
Rate this:
vira - tamil naadu,இந்தியா
11 நவ, 2019 - 19:15 Report Abuse
vira இன்னும் 10 நாளில் 400 கோடி என்பார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in