Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பிகில்'-ஐ வீழ்த்திய ‛கைதி' : பஞ்சர் ஆன ‛பஞ்ச்' டயலாக்

11 நவ, 2019 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Diwali-Race:-Kaithi-wins,-Bigil-defeated

பலத்த எதிர்பார்ப்புகளுடனும், ‛பஞ்ச் டயலாக்குகளுடனும் தீபாவளிக்கு வெளியான விஜய் நடித்த பிகில், எந்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் பஞ்ச் டயலாக்கும் இல்லாமல் வெளியான, கார்த்தி நடித்த ‛கைதி படத்திடம் தோற்றுப்போனது. இது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கும், அவரது ‛அன்பு அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த தீபாவளிக்கு இரண்டே இரண்டு படங்கள் தான் வெளியானது என்பது சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையான விஷயமாக இருந்தது. ஆனால், தீபாவளிக்கு வெளிவந்த விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்களும் சேர்ந்து சுமார் 400 கோடிக்கும் மேலாக வசூலை அள்ளியது என்பது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயமாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் அமைந்தது.

விஜய்யுடன் போட்டி போட்டால் கார்த்தி காணாமல் போய்விடுவாரே என கார்த்தி ரசிகர்கள் கலங்கிப் போய் இருந்தனர். இருப்பினும் கைதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ். தங்கள் படத்தின் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால், விஜய் படத்துடன் மோத தயாரானது.


பஞ்சர் ஆன ‛பஞ்ச்

பிகில் படத்தின் பட்ஜெட் 180 கோடி என அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படம் வெளிவருவதற்கு முன்பு பல பேட்டிகளில் தெரிவித்தார். அடிக்கடி படம் பற்றி டுவீட் வேறு செய்தார். ஆனால், படம் வெளிவந்த பின் வசூலைப் பற்றி எந்த ஒரு டுவீட்டையும் அவர் செய்யவில்லை. மேலும் விஜய் பட வெளியீட்டிற்கு முன்பா இசை வெளியீட்டில் அரசியல் பஞ்ச்கள் எல்லாம் பேசி ரசிகர்களின் கைதட்டலை வாங்கினார். ஆனால் படம் வெளியான பின்னரோ, தன் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு கைதானபோதோ அமைதியாகவே இருந்துவிட்டார்.
இரண்டு படங்களும் வெளிவந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. மூன்று சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் கடந்துவிட்டன. இத்தனை நாட்களில் பிகில் படம் வசூலித்த தொகை அதிகமாக இருந்தாலும் கூட அது தராத லாபத்தை கைதி படம் கொடுத்துள்ளதாக திரையுலகில் ஒரு பரபரப்புப் பேச்சை ஏற்படுத்தி உள்ளது.


எடுப்படாத பப்ளிசிட்டி
பிகில் படத்தின் வசூலைப் பற்றியும், வரவேற்பு பற்றியும் சில குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து டுவிட்டரில் மறைமுகமான உண்மையற்ற சில பல தகவல்களைக் கொடுத்து வந்தார்கள். அதே சமயம் கைதி படத்திற்கு அப்படி யாரும் எந்த விதமான தகவல்களையும் கொடுக்கவில்லை. மாறாக, படம் பார்த்த ரசிகர்களே படத்தைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பாசிட்டிவ்வான தகவல்கள் படத்தின் வசூலை நாளுக்கு நாள் அதிகரிக்க வைத்தது.

படம் வெளியான போது தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களில் வெளியான கைதி மூன்றாவது வாரத்தில் 350 ஆக உயர்ந்தது. பிகில் படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததால் அது பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடவேயில்லை.

பிகில் நஷ்டம்

இன்று விசாரித்த வகையில் பிகில் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 250 கோடி வரை வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கைதி படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிகில் வசூல் 250 கோடி என்று சொன்னாலும் அந்தப் படம் தியேட்டர்காரர்களுக்கு லாபத்தைக் கொடுத்தாலும் அது சில லட்சங்களில் மட்டுமே இருக்கும் என்கிறார்கள். கைதி படம் மூலம் கிடைக்கும் லாபம் பல லட்சங்கள் என்கிறார்கள்.

180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 250 கோடி வசூல் என்பது பெரிதா அல்லது 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 100 கோடி வசூல் என்பது பெரிதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். தியேட்டர் வசூல் அல்லாது கைதி படத்தின் மற்ற உரிமைகள் மேலும் 25 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்கள். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கைதி படத்தின் லாப விகிதம் அதிகமே.
பிகில் படத்தின் வசூல் தொகையைப் பற்றி விசாரித்த போது தியேட்டர்காரர்களுக்கும், தமிழ்நாடு உரிமையை வாங்கியவருக்கும் மட்டுமே லாபம் தரும் என்கிறார்கள். ஏரியா வாரியாக வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு மொத்தமாக ரூ.10 முதல் 15 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாம். மேலும் தீபாவளிக்கு இன்னும் ஓரிரு படங்கள் கூடுதலாக வெளியாக வந்திருந்தால் ‛பிகில் படம் கடும் நஷ்டத்தை சந்தித்து இருக்கும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். தயாரிப்பாளர் தரப்பில் படம் லாபமான வியாபாரம் என்று சொன்னாலும் உண்மையான பட்ஜெட், உண்மையான வியாபாரம் என்ன என்பதை அவர்கள் சொல்லவேயில்லை என்பதே திரையுலகத் தகவலாக இருக்கிறது.


பிகில் சத்தத்தைக் குறைத்த லாரி சத்தம்

பிரம்மாண்ட கமர்ஷியல் படம், விஜய் ஹீரோ, நயன்தாரா ஹீரோயின் ஏ.ஆர்.ரகுமான் இசை என பிகில் படத்தில் இருந்தவை கைதி படத்தில் இல்லை. படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, எந்த பிரம்மாண்டமும் இல்லை. ஒரே ஒரு லாரி, அதை ஓட்டிச் செல்லும் நாயகன். இதுதான் படத்தின் கதைக்களம். இப்படத்தின் வெற்றி தரமான படங்களை வித்தியாசமான படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
கால்பந்து மைதானத்தில் தன் விளையாட்டு வீராங்கனைகளை ஓட வைத்த நாயகன் கொடுத்த வெற்றியை விட, சில உயிரைக் காக்க தன் உயிரைப் பணயம் வைத்து லாரியை ஓட்டிய நாயகன் கொடுத்த வெற்றி அதிகமாகவே உள்ளது.

ஆம், ஒரு கோச்-சின் பிகில் சத்தத்தை ஒரு கைதியின் லாரி சத்தம் அடக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, இதன் பிறகாவது, சும்மா ‛பஞ்ச் டயலாக் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கற்பனை உலகில் மிதக்கும் நடிகர்கள், உண்மையான உலகத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
‛தலைவி படப்பிடிப்பு தொடங்கியது‛தலைவி படப்பிடிப்பு தொடங்கியது விஜய்க்கு உறவினர் ஆகும் அதர்வா விஜய்க்கு உறவினர் ஆகும் அதர்வா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vinoth - Madurai,இந்தியா
14 நவ, 2019 - 12:44 Report Abuse
Vinoth இந்த கட்டுரையில் சினிமா மீது உள்ள அக்கறையை விட விஜய் மீது உள்ள வன்மமே அதிகம் வெளிப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே சண்டை மூட்டி விடும் வேலையை செய்வதில் பெரிய ஆச்சிரியம் இல்லை.
Rate this:
Vivek - Madurai,இந்தியா
14 நவ, 2019 - 12:13 Report Abuse
Vivek சினிமா மீது உள்ள அக்கறையை விட விஜய் மீது உள்ள வன்மமே அதிகம் வெளிப்பட்டுள்ளது.
Rate this:
தா்மசிந்தனை - chennai,இந்தியா
13 நவ, 2019 - 17:31 Report Abuse
தா்மசிந்தனை என்னையா நீ.... ஒண்ண திட்டினது இப்ப எனக்கு அசிங்கமா இருக்கு ரொம்ப சாரியா மனசுல வச்சிக்காத நன்றி
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12 நவ, 2019 - 08:33 Report Abuse
elakkumanan மக்களும் இது போன்ற குப்பைகளை (திருட்டு கதைகளை )முக்கியமா இட்லி படங்களை மொத்தமாக ஒதுக்கணும். அசுரன் , கைதி மாதிரி நல்ல கதை , உழைப்பு உள்ள படங்களையே ஏற்கணும். விசில் குஞ்சுகள் இப்போ கொஞ்சம் உணர்ந்திருக்கும் என்று நம்புவோம். நம்ம சோசப்பு, நிஜமாவே , நல்ல, வீரமான, யோக்கியமான...............எல்லாம் ஓரளவுக்கேனும் புரிஞ்சிருக்கணும். தினமலர் . அந்த மாய வலையிலிருந்து இந்த ரசிக குஞ்சுகளை மீட்கவும், படங்களை ரசிக்கவும் கற்றுக்கொடுத்து , தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 நவ, 2019 - 07:39 Report Abuse
LAX சும்மா வெத்து ஹீரோக்களுக்கு பல்லாக்கு தூக்கி வெட்டியான வேலை பாக்கறதவிட.. 'பிகில் சத்தம் காணாமபூடுச்சு.. ' னு நிதர்சனமான உண்மையை விலாவாரியா வெளிப்படுத்திய பாங்குங்கே.. தினமலருக்கு 'விசிலடித்து' பாராட்டுக்கள்..
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in