Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் அருண்மொழி மாரடைப்பால் காலமானார்

10 நவ, 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
director-arulmozhi-passes-away

நடிப்பு, நாடகம், இயக்கம், திரைக்கதை, ஆவணப்படம், திரை மொழி கற்பித்தல் ஆகியவற்றில் தனித்து விளங்கிய இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் நேற்று (நவ.,09) இரவு காலமானார்.


அவள் அப்படித்தான் (1979), ஏழாவது மனிதன் (1982), காணிநிலம் (1987) ஏர்முனை (1992) உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் அருண்மொழி. சிறுதுளி, நிலமோசடி, தோழி ஆகிய ஆவணப்படங்களை இயக்கினார். மேலும், மக்கள் கவிஞர் இன்குலாப், கோவை ஞானி, ராஜம் கிருஷ்ணன், சாமிநாத ஆத்ரைய்யா, புரிசை கண்ணப்ப தம்பிரான், ஸ்தபதி சிற்பி தட்சிணாமூர்த்தி, கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இசைவானில் இன்னொன்று (இளையராஜா) உள்ளிட்ட பிரபலங்கள் குறித்த ஆவணப்படங்களையும் அருண்மொழி இயக்கி உள்ளார்.


2010க்குப் பிறகு பிரசாத் ஸ்டுடியோ நடத்திவந்த திரைப்படக் கல்லூரியில் பணியாற்றினார். சமீப ஆண்டுகளில் அருண்மொழி, நடிப்புப் பயிற்சிக்கென்று சொந்தமாகவே ஸ்தானிஸ்லாவிஸ்கி நடிப்புப் பள்ளி என்ற பெயரில் ஒரு திரைப்படப் பயிற்சிக் கூடத்தைத் தொடங்கினார். இவை தவிர சில திரைப்படங்களிலும் பல குறும்படங்களிலும் நடித்தவர். பல திரைப்பட, குறும்பட, ஆவணப்பட விழாக்களில் நடுவர், தணிக்கை குழு உறுப்பினர், நாடக இயக்குநர், பத்திரிகையாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் இயக்குநர் அருண்மொழி.


இந்நிலையில் அருண்மொழி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன. பிரபலங்கள் பலரும் காலையிலிருந்து திருவான்மியூரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
23 வயது வித்தியாசம், யார் பதில் சொல்வார்கள் ?23 வயது வித்தியாசம், யார் பதில் ... அனுஷ்காவைத்  தூக்க முடியாத அஞ்சலி அனுஷ்காவைத் தூக்க முடியாத அஞ்சலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

11 நவ, 2019 - 10:38 Report Abuse
கணேஷ் அவள் அப்படித்தான் படத்தின் இயக்குனர் இவர் இல்லை
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 நவ, 2019 - 00:57 Report Abuse
LAX ஆழ்ந்த இரங்கல்கள்..
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
10 நவ, 2019 - 13:28 Report Abuse
 N.Purushothaman ஆழ்ந்த இரங்கல்கள் .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in